- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தவிர்க்கிறாரா நடிகை சாய்பல்லவி? கலைமாமணி விருதுக்கு கூட இதுவரை ரியாக்சன்...

தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தவிர்க்கிறாரா நடிகை சாய்பல்லவி? கலைமாமணி விருதுக்கு கூட இதுவரை ரியாக்சன் இல்லையே… – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் பிரேமம். இதில் மலர் டீச்சர் கேரக்டரில் அறிமுகமானவர் சாய்பல்லவி. நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் சாய்பல்லவி நடித்தார். தமிழில் என்ஜிகே கார்கி மாரி 2 பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து கடந்தாண்டில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தால் ஒரு படத்தில் கூட சாய்பல்லவி நடிக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தமிழக அரசு நேற்று 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது. அந்த வகையில் மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்குனர் லிங்குசாமி போன்றவர்கள் கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கலைமாமணி விருது குறித்து பாடகி ஸ்வேதா மோகன் கூறுகையில், எனக்கு கலைமாமணி விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஆனால் என் அம்மாவும் பாடகியுமான சுஜாதா மோகனுக்கு இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லையே என்ற கவலை உள்ளது. பலமுறை அது கடைசி நேரத்தில் கூட கைவிட்டு போனது என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் நடிகை சாய் பல்லவி போன்ற ஒரு சிலர் இன்னமும் கலைமாமணி விருது அறிவிப்பு பற்றி சமூக வலைதளத்தில் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. கார்கி அமரன் போன்ற தமிழ் படங்களில் நடித்த வகையில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்றாலும் அவர் தெலுங்கிலேயே இப்போது அதிகமாக கவனம் செலுத்துகிறார். தமிழில் வழக்கமான கதாநாயகி கதைகளில் நடிக்க மறுக்கிறார்.

தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே பெரிய ஹீரோ படம் என்றாலும் கூட ஓகே சொல்கிறார். மற்ற ஹீரோயின்களில் இருந்து அவர் தனித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நண்பர்களும் குறைவு. அவரை சினிமா சார்ந்தவர்களே எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கூட அவர் அதிகமாக தலை காட்டுவது இல்லை என்ற தகவல் பரவி வருகிறது. அதனால் தமிழ் சினிமாவை சாய் பல்லவி புறக்கணிக்கிறாரா என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்