தென்னிந்திய சினிமாவில் இப்போது நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தமிழ் மலையாளம் தெலுங்கு படங்களைத் தொடர்ந்து இப்போது இந்தி படங்களிலும் சாய்பல்லவி நடிக்க துவங்கி இருக்கிறார். இராமாயணம் என்ற இந்தி படத்தில் சீதையாக நடித்து அவர் அறிமுகம் ஆகியிருக்கிறார். அந்த படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
அதற்கு முன்னதாகவே நடிகை சாய் பல்லவி நடித்த ஏக் தீன் என்ற இந்தி படம் கடந்த மே 1ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. அதனால் கண்டிப்பாக இராமாயணம் திரைப்படம் சாய் பல்லவிக்கு பாலிவுட்டில் அவரது மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தும் என்று கருதப்படுகிறது.
வழக்கமாக சினிமா வாய்ப்புகளுக்காக பல இளம் நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கின்றனர். அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போடுகின்றனர். ஆனால் நடிகை சாய்பல்லவி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். எவ்வளவு கோடிகள் சம்பளத்தை கொட்டிக் கொடுத்தாலும் நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் சாய்பல்லவி இருந்து வருகிறார்.
மேலும் தமிழில் அமரன் என்ஜிகே மாரி 2 கார்கி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்திருக்கிறது. குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பு வேற லெவலில் இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, எனக்கு ஒரு காதலர் இருந்தால் அவர் நடிப்பதிலோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ வேறு ஒருவரை முத்தமிடக்கூடாது என்றுதான் நான் நினைப்பேன். ஒரு ஆணோ பெண்ணோ நல்ல குடும்பம் கார் வாழ ஒரு வீடு இருந்தாலே போதும். நல்ல வாழ்க்கை வாழ்ந்து விடலாம். இதெல்லாம் எனக்கு ஏற்கனவே இருக்கின்றன.
கூடுதலாக இன்னொரு கார் வாங்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை முத்தமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது இருக்கும் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு படத்தில் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் நடிக்கிறேன். ஆனால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் வேறு ஒருவரை அவர்கள் தேர்வு செய்து கொள்ள சொல்லுவேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார்.





