- Advertisement -
Homeபொழுதுபோக்குமயோசிடிஸ் பாதிப்பால் சமந்தா எடுத்த திடீர் முடிவு - ரசிகர்களால் இதை ஏத்துக்கவே முடியாதே?

மயோசிடிஸ் பாதிப்பால் சமந்தா எடுத்த திடீர் முடிவு – ரசிகர்களால் இதை ஏத்துக்கவே முடியாதே?

- Advertisement -

என்னதான் கவர்ச்சி காட்டி சில நடிகைகள் நடித்தாலும், ஒரு கட்டத்துக்கு பிறகு அந்த நடிகைகளில் மீதான ஈர்ப்பும், ரசிப்பு தன்மையும் ரசிகர்களுக்கு மாறிப் போய்விடுகிறது. அடுத்தடுத்த நடிகைகள் புதிதாக வரும்போது அவர்களை ரசிக்க துவங்கி விடுகின்றனர். இதில் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைதான் பல நடிகைகளுக்கும். அதனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்போதே நிறைய படங்களில் நடிக்கின்றனர்.

இதில் சில நடிகைகள் விதிவிலக்காக ரசிகர்களால் பார்க்கப்படுகின்றனர். பல ஆண்டுகள் சினி பீல்டில் இருந்தாலும், இல்லாமல் போனாலும் மீண்டும் அந்த நடிகை நடிக்க வந்தால் அதே ஆர்வத்தோடு அந்த நடிகைகளின் படங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். எப்போதும் போல அவரது அழகை, நடிப்பை ரசித்து வரவேற்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இப்போது நடிகை சமந்தா, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். சமந்தாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரது திருமண காலகட்டத்திலும், திருமணத்துக்கு பிறகு விவாகரத்தான காலகட்டத்திலும், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டு வரும் காலகட்டத்திலும் சமந்தா ரசிகர்கள் அவரை விரும்பி வரவேற்கவே செய்கின்றனர்.

கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, அவரது 69வது படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சமீபமாக பரவி வருகிறது. இப்போது சிட்டாடல் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு அருவியில் டூ பீஸ் உடையில் அவர் குளித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

- Advertisement -

இதற்கிடையே இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மும்பையில் நிரந்தரமாக செட்டில் ஆகும் நடிகை சமந்தா, அங்கிருந்தபடியே இந்தி படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் என்பதுதான். அதாவது மயோசிடிஸ் நோய் பாதிப்பால், இனி நடிக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ள அவர், இந்தி படங்களை தயாரிப்பது என்ற முடிவை செய்திருக்கிறார்

ஐதராபாத்தில் சமந்தாவுக்கு சொந்தமான சொத்துகள், வீடுகள், நிலங்கள் நிறைய உள்ள நிலையில், அவர் ஐதராபாத்தில் செட்டில் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மும்பையில் செட்டில் ஆக முடிவெடுத்தது மட்டுமின்றி, இந்தி படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் மாறுகிறார். இனி தமிழ் படங்களில் அவர் நடிப்பது சந்தேகம்தான். இது தமிழ் சினிமா சமந்தா ரசிகர்களை பயங்கர ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

- Advertisement -

சற்று முன்