சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தை சேர்ந்தவர் நடிகை சமந்தா. தமிழ்ப் பொண்ணு என்று பலமுறை நேர்காணல்களில் கூறிவரும் சமந்தா தெலுங்கு படங்களில் நடித்து பிரபல நடிகையானார். தமிழிலும் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தியிலும் சமந்தா படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் விஜயுடன் கத்தி தெறி தனுஷூடன் தங்கமகன் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள சிவகார்த்திகேயனுடன் சீமராஜா விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக சமந்தா இருந்து வருகிறார்.
நானி மற்றும் சுதீப் நடித்த ஈ படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டார். நான்கே ஆண்டுகளில் சமந்தா திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட அவர், பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்தார். இப்போதும் பல படங்களில் பிஸியாக சமந்தா நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த ஆண்டில் அவரது மாஜி கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் 2வது திருமணம் கோலாகலமாக நடந்தது.
இந்நிலையில் நடிகை சமந்தாவும் 2வது திருமணம் செய்துக்கொள்வாரா, யாரையாவது மீண்டும் காதலிக்கிறாரா என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இப்போது அதற்கான பதில் கிடைத்துளளது. சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி என்ற இந்தி வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர் ராஜ் நிடிமோர் உடன் சமந்தா நெருக்கமாக பழகி வருவதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் பிக்கில் பால் விளையாட்டு போட்டியை காண வந்த சமந்தாவுடன் இயக்குனர் ராஜ் நிடிமோர் கைகோர்த்தபடி காணப்பட்டுள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை கண்டு களித்துள்ளனர். இருவரும் கைகோர்த்தபடி நிற்பது, நடப்பது போன்ற புகைப்படங்களும் வீடியோவும் வைரலான நிலையில் சமந்தா மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா வதந்தியா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.





