- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் படங்களுக்கு தேசிய விருது பஞ்சாயத்து ஒருபுறம் ஓரமா இருக்கட்டும் - நடிகர் கமல்ஹாசன்...

நடிகர் தனுஷ் படங்களுக்கு தேசிய விருது பஞ்சாயத்து ஒருபுறம் ஓரமா இருக்கட்டும் – நடிகர் கமல்ஹாசன் வாங்கியிருக்கிற விருதுகளை பாருங்க!

- Advertisement -

திரைப்படங்கள் என்பது எல்லாவிதங்களிலும் மக்களை திருப்திப்படுத்த வேண்டும். குறிப்பாக திரையில் நடிகர்களின் கதாபாத்திரங்களும் அவர்களது ஆளுமைத்திறனும் வெளிப்பட வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு தேசிய விருது என்ற அங்கீகாரம் தரப்படும்போது அதை ரசிகர்களும் பாராட்டி விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

மலையாளத்தில் நடிகர் மம்முட்டிக்கு 4வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடித்த பிரம்மயுகம் என்ற படத்திற்காக அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் வெற்று மார்புடன் இடுப்பில் கட்டிய ஒரே ஒரு வேட்டியுடன் கொடூரமான ஒரு முகத்துடன் மம்முட்டி தனது ஒவ்வொரு அசைவிலும் தனது ஆளுமையான முதிர்ச்சியான நடிப்பை அவ்வளவு நேர்த்தியாக தந்திருப்பார்.

- Advertisement -

அந்த படத்தின் ஓரிரு காட்சிகளை பார்த்தாலே தேசிய விருது மட்டுமல்ல, எந்த ஒரு சிறந்த விருதும் அவருக்கு தந்து அந்த விருதை பெருமைப்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் ரசிகர்களுக்கு தோன்றும். ஆனால் ஆடுஜீவிதம் லப்பர் பந்து திரு மாணிக்கம் தங்கலான் என பல படங்கள் இருந்தும் படம் முழுவதும் ரத்தவாடை தெறிக்கும் வன்முறை களங்களாக இருந்த ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது என்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் போன்றவர்களின் படங்கள் கமர்ஷியலை மட்டுமே குறிவைக்கும் படங்களாக இருக்கின்றன. யதார்த்த சினிமாவை தாண்டிய அந்த படங்களுக்கு விருதுகள் தருவது தேசிய விருது நடுவர் குழுவின் செயல்பாட்டை விவாதமாக இணையத்தில் மாற்றியுள்ளது. மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி சிங்கம்புலி இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு அந்த படத்தில் நடித்த சிறுமி சாச்சனாவுக்கு தேசிய விருது அது குணச்சித்திர நடிகை பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே உலக நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் இதுவரை பெற்ற விருதுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். அரசு கவுரவங்கள் விருது 6 முறை கமல் வென்று இருக்கிறார். தேசிய திரைப்பட விருதுகள் 5 முறை பிலிம்பேர் விருதுகள் 21 முறை தமிழ்நாடு மாநில அரசின் திரைப்பட விருதுகள் 11 முறை என பெற்றுள்ளார்.

மேலும் நந்தி விருதுகள் – 5 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைமா) – 5 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் – 5 விஜய் விருதுகள் – 8 விஜய் மியூசிக் விருதுகள் – 2 சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – 13 ஜி சினி விருதுகள் – 2 ஸ்கிரீன் விருது – 1 பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க விருதுகள் – 2 பிற திரைப்பட விருதுகள் – 14 திரைப்பட விழா விருதுகள் – 34 பிற கௌரவங்கள் – 75 என மொத்தம் 209 விருதுகளை பெற்றவர் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்