சின்னத்திரை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் வில்லனாக மிரட்டியவர் சஞ்சீவ். தொடர்ந்து சன் டிவியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை திருமதி செல்வம் டிவி சீரியலில் முன்னணி கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார். அதில் நடிகை அபிதாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்திருந்தார்.
மேலும் பல திரைப்படங்களில் நடிகர் விஜய்க்கு நண்பராகவும் சஞ்சீவ் நடித்திருக்கிறார். நம்பிக்கை அண்ணாமலை ஆனந்தம் அகல்யா மனைவி வேப்பிலைக்காரி பெண் மணிக்கூண்டு கலசம் சிவசக்தி இதயம் துளசி யாரடி நீ மோகினி கண்மணி உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் சஞ்சீவ் நடித்திருக்கிறார்.
பொன்மனச் செல்வன் என்ற படத்தில் நடிகர் கவுண்டமணிக்கு மகனாக சஞ்சீவ் நடித்திருந்தார். மேலும் சந்திரலேகா நிலாவே வா பத்ரி புதிய கீதை ஆகிய படங்களில் நடிகர் விஜய்க்கு நண்பனாக நடித்திருந்தார். என் மன வானில் நெஞ்சிருக்கும் வரை பாலைவனச்சோலை என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ். தவெக கட்சியில் முக்கிய பொறுப்பு இவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சீவ் தரப்பில் பெரிய ஆர்வம் காட்டாமல் விஜயுடன் நண்பராக மட்டுமே அவர் தனது நட்பை தொடர்கிறார். எதிர்காலத்தில் தவெகவில் இவரும் ஒரு முக்கிய பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சஞ்சீவ் கூறியதாவது, நடிகை மஞ்சுளா எங்க அம்மாவோட கூடப் பிறந்த தங்கச்சி. அவங்க என்னோட சித்தி. நடிகர் விஜயகுமார் என் சித்தப்பா. அருண் விஜய் என்னோட தம்பி. வனிதா விஜயகுமார் என்னோட தங்கச்சி. என்னதான் சினிமா குடும்பத்திலிருந்து வந்தாலும் யாரும் யாராலேயும் வளர்த்து விட முடியாது.
இன்னாரோட பையன் தம்பி மச்சான் என்று எவனாலும் எவளாலும் வர முடியாது. சினிமாவில் ஒரு ஒரு என்ட்ரி வேணா கிடைக்கலாம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம்ங்கிறது நம்ம கையில் தான் இருக்கு என்று நடிகர் சஞ்சீவ் கூறியிருக்கிறார். உண்மையில் நடிகர் விஜயகுமார் குடும்பத்தின் மிக நெருக்கமான உறவினர் சஞ்சீவ் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தந்துள்ளது.





