தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் கத்தி தெறி தங்கமகன் நீதானே என் பொன்வசந்தம் 10 எண்றதுக்குள்ள சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். இந்தியில் அவர் நடித்த சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க சமந்தா கமிட்டாகி இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, மருத்துவ சிகிச்சை பெற்று அந்த நோயிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமந்தா சொந்தமாக தொடங்கினார். பொதுவாக நடிகர்கள், இயக்குனர்கள்தான் சொந்தமாக படங்களை தயாரிக்க நிறுவனம் துவங்குவார்கள்.
ஆனால் நடிகை சமந்தாவுக்கு சினிமாவின் மீது இருக்கும் அளவு கடந்த ஆர்வத்தால் அவரே சொந்தமாக ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அவரது நிறுவனம் தயாரிப்பில் சுபம் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹர்ஷித் மல்கி ரெட்டி ஷாலினி கொண்டேபுடி ஷிரியா குந்தம் ஷெரவாணி சரண் பெரிமற்றும் கவி ரெட்டி சீனிவாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹாரர் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் நடந்தது.
அந்நிகழ்ச்சியில் சுபம் படத்தின் தயாரிப்பாளர் சமந்தா கலந்து கொண்டு பேசியதாவது, வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படும்போது தான் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். நான் சினிமாவை விட்டு ஓய்வில் இருந்த போது தான் நிறைய விஷயத்தை யோசித்தேன். என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. மீண்டும் நடிக்க முடியுமா என்று கூட எனக்கு தெரியவில்லை.
ஆனால் எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. அப்போதுதான் தயாரிப்பாளர் ஆகலாம் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. நான் சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு சினிமா நடிகையாக நான் கற்றுக் கொண்டதை விட தயாரிப்பாளராக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இன்னும் பல விஷயங்களை காத்துக் கொள்வதற்காக காத்திருக்கிறேன் என்று நடிகை சமந்தா பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





