- Advertisement -
Homeபொழுதுபோக்குவெப் சீரிஸ் ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகை சமந்தா - பதறியடித்த படப்பிடிப்புக்குழு மருத்துவமனையில் சேர்த்ததால்...

வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகை சமந்தா – பதறியடித்த படப்பிடிப்புக்குழு மருத்துவமனையில் சேர்த்ததால் பரபரப்பு

- Advertisement -

நடிகை சமந்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அழகான நடிகையாக இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் சமந்தாவுக்கு நிறைய வரவேற்பு இருந்ததால், அங்கு நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் சீமராஜா, மெர்சல், கத்தி, ஈ, அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, பெங்களூர் நாட்கள், 24, காத்துவாக்குல ரெண்டு காதல் என பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் கடந்தாண்டில் நடித்த மிகவும் எதிர்பார்த்த சரித்திர படம் சாகுந்தலம் நல்ல வரவேற்பை பெறவில்லை. எனினும் தொடர்ந்து நல்ல வெற்றிக்கான படங்களை சமந்தா தேடிக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாகர்ஜூனா – அமலா நட்சத்திர தம்பதி மகன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை, சமந்தா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். முறைப்படி விவாகரத்தும் பெற்று விட்டனர். திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என, நாகசைதன்யா தடை போட்டதால், இந்த பிரிவு என்று கூறப்படுகிறது.

குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா ஊகூம் சொல்றியா மாமா என்ற பாடலுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் சமந்தா. இந்த பாடல் காட்சி பட்டிதொட்டி எங்கும் டிரண்டிங் ஆனது. இதனால் மனம் வருந்திய நாகர்ஜூனா குடும்பத்தினர், சமந்தா இதுபோன்ற பாடல் காட்சிகளில் நடித்தால் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று, அவரை நடிக்க வேண்டாம் என்று கூறியதால், இந்த விவாகரத்து முடிவு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கணவரை விட்டுப் பிரிந்த சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில், மயோசிட்டிஸ் எனப்படும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பல மாதங்களாக அவர் தீவிர சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். வெளிநாடுகளிலும், வீட்டிலும் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தன் உடல் நல பாதிப்பை கடந்து, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்நிலையில், சிட்டா என்ற வெப்சீரிஸ்சில் நடித்து வரும் சமந்தா, அரைமணி நேரம் கூட தொடர்ந்து நிற்க முடியாத சிரமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதில் முக்கிய சண்டை காட்சி ஒன்றில் சமந்தா பங்கேற்க வேண்டிய நிலையில், டூப் எடுத்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது. இல்லை, நானே நடிக்கிறேன் என, தொழில் சிரத்தையுடன் சண்டை காட்சியில் பகீரத முயற்சி எடுத்து நடித்து முடித்த அவர், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டார். பதறிப்போன படக்குழுவினர், அவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளர். அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்