தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. இந்தியில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடிமூர் என்பவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் சமந்தா திருமணம் செய்துக்கொண்டார்.
திரைப்பட நடிகையாக மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் ஆரம்பித்து நடிகை சமந்தா படங்களை தயாரித்து வருகிறார். எங்கள் தங்கம் என்ற படத்தை அவரே தயாரித்துள்ளார். நடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரம் என்ற தெலுங்கு படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகிறது.
சென்னையில் நடந்த எங்கள் தங்கம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நடிகை சமந்தா பேசியதாவது, சென்னையில் பழைய நண்பர்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் தயாரிப்பாளர் நான்தான். என்னுடைய தயாரிப்பு நிறுவனம் பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்திய படங்களை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறோம்.
அதன்படி இந்த படத்திற்கு சாய் பல்லவியை முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். அவர் கால்ஷீட் பிஸியால் நோ சொன்னதும் படத்தில் இன்னும் கொஞ்சம் ஆக்சன் காட்சிகளை வைத்து நான் நடிக்க முடிவு செய்தேன். என்னை பொறுத்த வரையில் நடனக் காட்சிகளை விட ஆக்சன் காட்சிகள் எளிதாக உள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு தேடி வருகிறேன். இந்த படம் மாதிரி நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.
தயாரிப்பாளர் பொறுப்பை விட நடிகையாக இருப்பது குஷிதான். இந்த கடைசி 5 நாட்களாக ஒரு படம் தயாரிப்பதில் இருக்கும் கஷ்டத்தை புரிந்து கொண்டேன். தமிழ்நாடு என்னுடைய வீடு. கண்டிப்பாக உங்களை நான் பெருமைப்படுத்துவேன். தமிழில் மீண்டும் நடிக்க நல்ல கதைகளை தேடி வருகிறேன். நல்ல கதாபாத்திரத்தை கொடுக்க இயக்குனர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தில் நான் யார் தெரியுமா என்ற மாஸ் டயலாக் உள்ளது. அந்த பில்டப் டயலாக் பேச ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அதுதான் அதிக டேக் வாங்கியது. அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது என்று நடிகை சமந்தா பேசியிருக்கிறார். அதன் பிறகு சென்னை பட்டிணப்பாக்கத்தில் உள்ள முதல்வர் விஜயின் அலுவலகத்திற்குச் சென்ற சமந்தா முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்தினார். மெர்சல் தெறி கத்தி ஆகிய படங்களில் நடிகர் விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





