- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார் சொன்ன மலையாள நடிகை ரேவதி சம்பத் - அதுக்கு...

நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார் சொன்ன மலையாள நடிகை ரேவதி சம்பத் – அதுக்கு ரியாஸ்கான் காட்டிய ரியாக்சன் என்ன தெரியுமா? – அவர் சொல்றது உண்மைதானா?

- Advertisement -

மலையாள சினிமாவில் தொடர்ந்து பாலியல் புகார்கள் அதிகரித்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் சினிமா வாய்ப்புக்காக பாலியல் அழுத்தங்களுக்கு பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர் என்ற அறிக்கையை அந்த கமிட்டி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி மலையாள சினிமா நடிகர், நடிகையர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் சினிமா நடிகர் கருணாஸ், அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருவர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். இதில் யாருடைய விருப்பமும் இல்லாமல் எதுவும் நடக்காது என்று கூறி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பத்ரி, வின்னர், சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மலையாள நடிகை ரேவதி சம்பத், ரியாஸ்கான் என்னை போனில் அழைத்து என்னுடைய ஆசைக்கு சம்மதிக்கும் உன்னுடைய தோழிகளை எனக்கு அறிமுகப்படுத்தி வை என்று ரியாஸ்கான் சொன்னார் என்று கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் ரியாஸ்கான் பல படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர். அவரது மனைவி உமா ரியாஸ்கான். இவரது விசு படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகை கமலா காமேஷின் மகள் ஆவார். கமல் நடித்த அன்பே சிவம் படத்தில், கமலுடன் பல காட்சிகளில் உமா ரியாஸ்கான் நடித்திருப்பார்.

- Advertisement -

ரியாஸ்கான் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக உள்ள நிலையில், அவர் மீது இப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இரு தினங்களுக்கு முன்புதால் ரியாஸ்கான் – உமா ரியாஸ்கான் மகன் ஷாரிக் திருமணம் நடந்தது. இவர் விஜய் டிவி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் கூறியிருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ரியாஸ்கான் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரேவதி சம்பத் யாரென்றே எனக்கு தெரியாது. அவரை இப்போதுதான் செய்தியில் நான் பார்க்கிறேன். என் மீது கூறப்பட்ட பொய் புகாருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்