- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் மரியாதை படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் டைரக்டர் இவரா, ஹீரோ யாரு தெரியுமா? -...

முதல் மரியாதை படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் டைரக்டர் இவரா, ஹீரோ யாரு தெரியுமா? – அட நினைச்சு பார்த்தாலே வேற லெவலா இருக்குதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்கள் எப்போது பார்த்தாலும் அதை ரசிக்க முடியும். அப்படியான படங்களில் ஒன்றுதான் முதல் மரியாதை. தமிழ் சினிமா வரலாறை சொன்னால், இந்த படத்தை சொல்லாமல் தவிர்க்க முடியாது. அதாவது, 38 ஆண்டுகளுக்கு முன், உடல் தாண்டிய உள்ளம் சார்ந்த அன்பை சொன்ன கதை இது.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1985ம் ஆண்டில் வெளிவந்த படம் இது. சிவாஜிகணேசன், வடிவுக்கரசி, ராதா, சத்யராஜ், ரஞ்சனி, வீராச்சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இன்று கேட்டாலும், தேனில் ஊறிய பலாச்சுளையாக தித்திக்கும். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வைரமுத்து.

- Advertisement -

ஊர் பெரிய மனிதரான சிவாஜி, பரிசல்காரியான ராதாவிடம் வெள்ளந்தியாக பழகுவார். ஒரு கட்டத்தில் அவர்களது ஊரார் தவறாக பேசி, சிவாஜிக்கும், ராதாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படும். மனதுக்குள் ராதா மீது அன்பு இருந்தும் அதை சிவாஜி வெளிக்காட்டாமல் இருப்பார். கடைசியில் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடக்கும் சிவாஜி, ராதா வந்து கையை தொட்டவுடன் சிவாஜி உயிர் பிரியும்.

இந்த படத்தில் சத்யராஜ் கவுரவ தோற்றத்தில் மயில்வாகனன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். படமே இவரை மையப்படுத்தியதுதான். இவர் வடிவுக்கரசியை காதலித்து, கர்ப்பமாக்கி விட்டு ஜெயிலுக்கு சென்றுவிட, சிவாஜி, தனது மாமா பெண் வடிவுக்கரசியை கட்டாயத்தால் திருமணம் செய்துகொள்வார். இப்படி படம், மிக வித்யாசமான கோணத்தில் மிக மிக ரசிக்கும்படியாக இருக்கும். பாரதிராஜாவே விரும்பினாலும் மீண்டும் ஒரு முதல் மரியாதை படத்தை எடுக்க முடியாது என்று பலரும் சொல்வதுண்டு.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் கவுதம் மேனனிடம், எந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, உடனே முதல் மரியாதை என யோசிக்காமல் பதில் தந்துள்ளார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் கேரக்டரில் யார் நடித்தால் என்ற கேள்விக்கு, கமல்ஹாசன் என்றும் பளிச்சென பதில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த படத்தின் மிக முக்கியமான குயிலு என்கிற ராதா கேரக்டர் குறித்து, அதில் யார் நடிக்கலாம் என்று கேட்டதற்கு கவுதம் மேனன் பிறகு சொல்கிறேன், என பதிலளித்தார். ஒருவேளை, அந்த முரண்பட்ட கேரக்டரில் நடிக்க இப்போதைய நடிகைகளில் யாருமில்லையோ என்று கூட கவுதம் மேனன் யோசித்து இருக்கலாம். ஏனெனில் ராதா ஏற்று நடித்த அந்த பரிசல்காரி கேரக்டர், பின்னணி பேசிய நடிகை ராதிகாவின் குரல், சிரிப்பு, ராதாவின் அந்த யதார்த்த நடிப்பை பார்த்த கவுதம் மேனன், அந்த கேரக்டரில் நடிக்கும் நடிகை இப்போது யாருமில்லை என்ற முடிவுக்கு கூட வந்திருக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சற்று முன்