- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்துல என்னை இப்படி ஏமாத்திட்டாங்க, தளபதி விஜய்தான் எனக்கு உதவணும் - கோரிக்கை வைத்த...

ஜனநாயகன் படத்துல என்னை இப்படி ஏமாத்திட்டாங்க, தளபதி விஜய்தான் எனக்கு உதவணும் – கோரிக்கை வைத்த பிக்பாஸ் நடிகை!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விஜய் பங்கேற்கும் காட்சிகள் வரும் 5ம் தேதி வரை படமாக்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2020ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி வால்டர் வெள்ளையா இருக்கறவன் போய் சொல்ல மாட்டான் 23 உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். கன்னடம் மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் பெரிய அளவில் சனம் ஷெட்டி முன்னணி நடிகையாக மாறவில்லை. இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த நடிகர் தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடப்பதாக இருந்து கடைசியில் தடைபட்டது. இந்த சூழலில் நடிகர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் நடிக்க நடிகை சனம் ஷெட்டி முயற்சித்திருக்கிறார்.

இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி கூறியதாவது, ஜனநாயகன் தளபதியோட கடைசி படமாச்சே? அவர் கூட நடிக்கிற ஆசை. இதுக்கு அப்புறம் அது நிறைவேறாதே என்பதால் ஒரு ஆறு மாசமா, ஜனநாயகன் டீம்ல இருக்கிற அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருத்தரை வாய்ப்புக்காக பாலோ பண்ணிட்டு இருக்கேன்.

- Advertisement -

நீங்க அவர்கூட நடிக்க வாய்ப்பிருக்கு, நிச்சயமாக ஓகே ஆயிடும் என்றுதான் அவர் சொல்லிட்டே இருந்தார். தப்பான வகையில் அவர் எதுவும் என்னிடம் பேசவில்லை. ஆனால் என்னை அலைய வைத்திருக்கிறார்கள் என்று இன்னைக்கு தான் எனக்கு தெரிய வருகிறது. இப்போது கேட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் சொல்கிறார்கள்.

ஏன் இப்படி அலைய வைக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு, நான் உங்களை பரிந்துரை பண்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று சொல்றாங்க. மார்க்கெட் வேல்யூ இல்லாத ஹீரோயின் என்பதால் இப்படி அலைய விடுவீங்களா, இந்த பாரபட்சம் தான் எனக்கு பிரச்சனை. தளபதி விஜய்க்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பே இல்லை. அதனால் அவர்தான் எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நடிகை சனம் ஷெட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்