தமிழில் அம்புலி மாயை விலாசம் கதம் கதம் சதுரம் 2 தகடு 23 டிக்கெட் வால்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழை விட மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் வில்லேஜ் டு வில்லேஜ் மற்றும் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராகவும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் டிவி சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இதற்கு நடிகை சர்மிளா பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, ஸ்ருதி நாராயணனின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களிடம் இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள். இது தனிப்பட்ட விஷயம் கிடையாது. இது ஒரு வியாபாரம். காஸ்டிங் கவுச் என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட ஒரு செயல்.
ஆடிசன் என்றால் என்ன வேணாலும் கேப்பீங்களா, காபி சாப்பிட கூப்பிடுவது போல மேடம் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் ஓகே தானே என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் என்னிடமே கேட்கிறார்கள். இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா?. அது போலியான வீடியோ என ஸ்ருதி கூறுகிறார். அது உண்மை என்றால் அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளாலும் இது போன்ற காஸ்டிங் கவிச்சாலும் என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு இன்று சினிமா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்களே உங்கள் சினிமாத்துறை நாறிப் போய் உள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள்.
நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, நியாயமான பட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி அந்த வீடியோவில் ஆவேசமாக கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிவி சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் குறித்த வெளியான வீடியோ ஏஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்றும், அதில் இருப்பது நான் இல்லை என்றும் அவர் விளக்கம் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.





