- Advertisement -
காந்தாரா படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தற்போது ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் ரிஷப் ஷெட்டி மியூசிக் நிறுவனம் ஒன்றையும் சொந்தமாக தொடங்கி இருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக புதிய படம் ஒன்றை அவர் உருவாக்க உள்ளார். அதற்காக புதிய முகங்களை அவரது தயாரிப்பு நிறுவனம் தேடி வருகிறது. பெங்களூரில் இதற்காக ஆடிசன் சமீபத்தில் நடத்தப்பட்டது. அடுத்து வட கர்நாடகாவில் உள்ள கலபுராகி நகரத்தில் ஆடிசன் நடந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு உள்ளனர். தனது அடுத்த படம் குறித்து இதுவரை அறிவிக்காமல் இருக்கும் ரிஷப் ஷெட்டி அதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அந்த படத்தை அவரே தயாரித்து இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





