கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் அவருடன் நடிக்க பல நடிகைகள் லைனில் நின்றார்கள். அந்தளவுக்கு சினிமா துறையில் மன்மதனாக வலம் வந்தவர் கமல்ஹாசன். தனது காந்த கண்களாலேயே பலரையும் மயக்கிப்போட்டவர் அவர். அவருடன் நடிக்க வேண்டும் என நடிகைகள் பலர் ஆசைப்பட்டாலும் அவர் திரைப்படத்தில் முத்த காட்சிகள் இருக்குமே என்று பயந்து அவர் படத்தில் நடிக்க மறுத்த சில நடிகைகளும் உண்டு.

இந்த நிலையில் ஒரு நடிகை, கமல்ஹாசனின் பெயரை சொல்லிய மறு நிமிடமே கதை என்னவென்று கூட கேட்காமல் படத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். அவர் யார்? அது என்னை படம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1978 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் “மரோ சரித்ரா”. இத்திரைப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மாஸ் ஹிட் ஆனது. ஒரு தெலுங்கு திரைப்படம் என்ற பேதம் இல்லாமல் பல தமிழர்கள் இந்த படத்தை தெலுங்கிலேயே விரும்பி பார்த்தார்களாம். அந்தளவுக்கு மிகப் பெரிய ஹிட் அடித்த திரைப்படமாக “மரோ சரித்ரா” அமைந்தது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக சரிதாவை நடிக்க வைக்கலாம் என்று அவரை அணுகினார்களாம். சரிதா ஏற்கனவே கமல்ஹாசன் மீது கிரஷ் ஆக இருந்தாராம். ஆதலால் கமல்ஹாசன் ஹீரோ என்ற வார்த்தையை கேட்டவுடனே அந்த படத்தில் நடிக்க சரிதா ஓகே சொல்லிவிட்டாராம். கதை என்ன என்பது குறித்து கூட கேட்கவில்லையாம். அந்தளவுக்கு கமல்ஹாசனை அவருக்கு பிடித்திருந்ததாம். சரிதா சமீபத்தில் கூட “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





