- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு - எம்ஜிஆர் சிவாஜி கணேசனுடன் இத்தனை படங்களில்...

மறைந்த நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு – எம்ஜிஆர் சிவாஜி கணேசனுடன் இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் வலம் வந்த காலகட்டத்தில் அவர்களுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை சரோஜா தேவி. இவரை கன்னடத்து பைங்கிளி என்றும் அபிநய சரஸ்வதி என்றும் ரசிகர்கள் அழைப்பது வழக்கம். கர்நாடகாவை சேர்ந்தவர் சரோஜா தேவி.

பெங்களூருவில் வசித்து வந்த நடிகை சரோஜா தேவி 87 வயதான நிலையில் இன்று காலை திடீரென உயிரிழந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ் இந்தி தெலுங்கு கன்னடம் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1955ம் ஆண்டில், தனது 14வது வயதில் கன்னட மொழி மகாதேவி காளிதாசா என்ற படம் மூலம் நடிகையா அறிமுகமானவர்.

- Advertisement -

தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் எம்ஜிஆருடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் சரோஜாதேவி நடித்திருக்கிறார். இதில் அன்பே வா படகோட்டி எங்க வீட்டுப் பிள்ளை நாடோடி மன்னன் நான் ஆணையிட்டால் பாசம் பணத்தோட்டம் தாயை காத்த தனையன் குடும்பத் தலைவன் என பல படங்களை சொல்லலாம்.

அதே போல் சிவாஜி கணேசனுடன் புதிய பறவை பாலும் பழமும் இருவர் உள்ளம் பார்த்தால் பசி தீரும் கிரகப் பிரவேசம் விடிவெள்ளி தேனும் பாலும் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். விஜயுடன் ஒன்ஸ்மோர் படத்திலும் சூர்யாவுடன் ஆதவன் படத்திலும் விஜயகாந்துடன் பொன்மனச் செல்வன் உள்ளிட்ட படங்களில் சரோஜா தேவி முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

சிறந்த நடிகையாக பல மொழிகளில் நடித்த நடிகை சரோஜா தேவிக்கு பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு நடிகை சரோஜா தேவிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. சரோஜா தேவிக்கு கடந்த 1967ம் ஆண்டில் மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷா என்பவருடன் திருமணம் ஆனது.

நடிகை சரோஜா தேவி – ஸ்ரீ ஹர்ஷா தம்பதிக்கு இந்திரா, கௌதம் ராமச்சந்திரன் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1986ம் ஆண்டில் சரோஜா தேவியின் கணவர் ஸ்ரீ ஹர்ஷா உடல் நலக்குறைவால் மறைந்தார். இந்நிலையில் 87 வயதில் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகை சரோஜா தேவி இன்று காலை காலமானார். நேற்றுதான் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைந்தார். மறுநாளே மீண்டும் ஒரு துயரமாக நடிகை சரோஜா தேவி மறைந்து விட்டார்.

- Advertisement -

சற்று முன்