- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க செஞ்ச தப்பை நான் எப்பவோ மறந்துட்டேன்னு எம்ஜிஆர் சொன்னார் - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த...

நீங்க செஞ்ச தப்பை நான் எப்பவோ மறந்துட்டேன்னு எம்ஜிஆர் சொன்னார் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை சரோஜா தேவி!

- Advertisement -

கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி என தமிழ் சினிமா ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை சரோஜா தேவி. எம்ஜிஆர் நடித்து இயக்கிய தயாரித்த நாடோடி மன்னன் படத்தில் 2வது கதாநாயகியாக சரோஜா தேவி அறிமுகமானார். தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆருடன் 26 படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

பெங்களூருவில் வசித்து வந்த நடிகை சரோஜா தேவி 87 வயதான நிலையில், கடந்த வாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். தமிழில் கடைசியாக பொன்மனச் செல்வன் ஒன்ஸ்மோர் ஆதவன் போன்ற படங்களில் நடிகை சரோஜா தேவி நடித்திருந்தார். எம்ஜிஆருடன் அவர் நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

சமீபத்தில் மறைந்த நடிகை சரோஜாதேவி, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவில் பங்கேற்ற போது பேசியதாவது, எம்ஜிஆர் மேலே நீங்க நிறைய அன்பு வெச்சிருக்கீங்க. அதெல்லாம் ஓகே. ஆனா அவரது வாழ்க்கையில் அவர் எப்படி எல்லாம் நடந்துக்கிட்டார், அந்த மாதிரி நீங்களும் வாழ்க்கையில் அவரை மாதிரி நடந்துக்கறதுக்கு முயற்சி பண்ணனும்.

வெறும் அவர் மேல அன்பு மட்டும் வெச்சா போதாது. அவரது வாழ்க்கையில் அவர் எவ்வளவோ உதவி பண்ணியிருக்கார். அதில் ஒரு விஷயம் சொல்லணும் என்றால் அவர் கால் உடைஞ்சு படுத்திருக்கும் போது அதுக்குள்ள நான் நடிச்சு பெரிய சூப்பர் ஸ்டார் ஆயிட்டேன். அப்போது திருடாதே படம் ஷூட்டிங்குக்கு மேக்கப் டெஸ்ட் போட்டது.

- Advertisement -

நான் ரொம்ப லேட்டா செட்டுக்கு வந்தேன். அவர் 7 மணிக்கே வந்து உட்கார்ந்திருவார். நான் வந்த உடனே எனக்கு ரொம்ப பயம் ஆயிடுச்சு. அவர் பக்கம் பார்க்கவே இல்லை. வணக்கம் சொல்லிட்டு உள்ளே ஓடிட்டேன். அப்புறம் அவர் வந்தார். அந்த சீன் வந்து என்னருகே நீ இருந்தால் அந்த பாட்டு. நான் என்ன பண்ணினேன். மூஞ்சியை கீழே பார்த்துட்டு பாடிட்டு இருந்தேன்.

அம்மா இது லவ் சீன். நீ லேட்டா வந்ததை எல்லாம் நான் எப்பவோ மறந்தாச்சு. இது இப்போ லவ் சீன். நாம ரெண்டு பேர் நல்லபடியா இந்த லவ் சீனை நடிச்சே ஆகணும் என்று சொன்னார். அந்த மாதிரி யாராவது தப்பு செஞ்சால் உடனே அவர் மன்னிசசிட்டு உடனே அவங்களை சேர்த்துக்குவார். அதுதான் எம்ஜிஆர் என்று அந்த விழாவில் நடிகை சரோஜா தேவி எம்ஜிஆர் குறித்து மனம் திறந்து பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்