ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நல்ல நிறமும் அழகான முகவெட்டும் கம்பீரமான உடல் தோற்றமும் இருந்தால் தான் நடிக்க முடியும் என்கிற ஒரு நிலை இருந்தது. அப்படிப்பட்ட அழகான தோற்றப் பொலிவுள்ள இளம் நடிகர்களை தான் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களது படங்களில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினர்.
ஆனால் ஒரு கட்டத்தில் அது அப்படியே தலைகீழாக மாறிப் போனது. அதனால் மிகவும் சாதாரணமான தோற்றத்தில் இருந்த சிலர் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாறி இருப்பது குறிப்பிடப்பட்டது. குறிப்பாக நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று விமர்சிக்கப்பட்டவர். அதேபோல் நடிகர் பிரதீப் ரங்கநாதனும் உருவக்கேலிக்கு ஆளானவர்.
ஆனால் அவர்கள் இருவருமே இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கின்றனர். இதே போல் ஆரம்பத்தில் நடிகர்கள் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் விஜய் விஜயகாந்த் போன்றவர்களும் கூட இதுபோன்ற விமர்சனங்களுக்கு உருவக்கேலிக்கு ஆளானவர்கள் தான் என்பதும் கவனிக்கத்தக்கது .அழகாக இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் குணச்சித்திர நடிகர்களாக தான் அண்ணன் தம்பி வேடங்களில் நடிக்கின்றனர். டாக்டர் போலீஸ் அரசு அதிகாரி கேரக்டர்களின் படங்களில் வருகின்றனர்.
ஆனால் நடிப்பு நடனம் திறமை இருப்பதால் அழகில்லாத நடிகர்கள் கூட ஹீரோக்களாக மக்கள் மத்தியில் ஜெயித்து விடுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பது என்றால் அதுவும் சில நடிகர்களுக்கு தான் மிகவும் அட்டகாசமாக பொருந்துகிறது. அதில் முதலிடம் எப்போதுமே கேப்டன் விஜயகாந்துக்கு தான்.
அடுத்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் சத்யராஜ் சரத்குமார் அஜீத்குமார் போன்றவர்களுக்கு போலீஸ் ஆபீஸர் கேரக்டர் மிகவும் அருமையாக பொருந்தியது. நடிகர் எம்ஜிஆரை காட்டிலும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு தான் போலீஸ் அதிகாரி கேரக்டர் பொருத்தமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வாத்தி படத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இப்போது மீண்டும் அவர்கள் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா? எதற்கு இந்த விஷப்பரீட்சை என்று இப்போதே ரசிகர்கள் இணையத்தில் கலாய்க்க தொடங்கி விட்டனர்.





