- Advertisement -
Homeபொழுதுபோக்குகன்னட நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு ஜோடியாக அறிமுகமானது எப்படி? - முதல்...

கன்னட நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு ஜோடியாக அறிமுகமானது எப்படி? – முதல் படத்திலேயே இப்படி ஒரு ஆச்சரியமா?

- Advertisement -

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை சரோஜா தேவி. 87 வயதான நிலையில், நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோருடன் ஏகப்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர்.

கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதர், மகாகவி காளிதாசா என்ற கேரக்டரில் நடித்தார். அவரே தயாரித்த படம் மகாகவி காளிதாசா. கடந்த 1955ம் ஆண்டில் வெளியான இந்த கன்னட படத்தில்தான் நடிகை சரோஜாதேவி அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் 2வது கதாநாயகி வேடத்தில் சரோஜாதேவி நடித்தார்.

- Advertisement -

அதே 1955ம் ஆண்டில் நடிகர் எம்ஜிஆர் சொந்த பட நிறுவனம் தொடங்கி அவரே டைரக்ட் செய்து தயாரித்து ஹீரோவாக நடித்த படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் ரத்னா என்ற கேரக்டரில் சரோஜாதேவி நடித்திருந்தார். இதுதான் அவர் நாயகியாக தமிழில் அறிமுகமான முதல் படம். தொடர்ந்து எம்ஜிஆருடன் நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு திருடாதே தாய் சொல்லை தட்டாதே படகோட்டி எங்க வீட்டுப் பிள்ளை பெற்றால் தான் பிள்ளையா அன்பே வா உள்ளிட்ட 26 படங்களில் சரோஜாதேவி நடித்திருந்தார்.

சரோஜாதேவி நாடோடி மன்னன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக, இயக்குனர் கே சுப்பிரமணியம் தயாரித்த கச்ச தேவயானி என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் கே சுப்பிரமணியத்தை சந்திக்க வந்த எம்ஜிஆர் அங்கே நடித்துக் கொண்டிருந்த புதுமுக நடிகை சரோஜாதேவி பார்த்து யார் இந்த பெண் என்று கேட்டுள்ளார். அவர் பெயர் சரோஜாதேவி பெங்களூரைச் சேர்ந்தவர் என்று எம்ஜிஆருக்கு தெரியவந்தது.

- Advertisement -

சரோஜாதேவியை பார்த்த எம்ஜிஆர், அவர் அடுத்து நடிக்க இருந்த திருடாதே படத்தில் சரோஜாதேவியை கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்பினார். அதனால் சரோஜாதேவி அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. புதுமுக கதாநாயகியா என்று படக்குழுவினர் குழப்பம் காட்டினாலும் எம்ஜிஆர் தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் திருடாதே படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதையடுத்து எம்.ஜி.ஆர் தனது சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் சரோஜாதேவியை 2வது கதாநாயகியாக நடிக்க வைத்தார். நாடோடி மன்னன் படம் பாதி வரை கருப்பு வெள்ளையாகவும் அதன் பிறகு வண்ணத்திலும் வந்தது. அந்த வண்ணத்தில் வரும் அறிமுக காட்சியில் எம்ஜிஆர் சரோஜா தேவியும் இணைந்து நடித்த பாடல் காட்சிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.முதல் முறையாக வண்ணத்திரையில் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் அந்த படத்தில் காட்சி தந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

- Advertisement -

சற்று முன்