- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அருள்நிதி இயக்குனர் அமீர் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான் - கருப்பு படம்...

நடிகர் அருள்நிதி இயக்குனர் அமீர் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான் – கருப்பு படம் தந்த பாதிப்போ? இந்த டைட்டிலை வெச்சது யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் அருள்நிதி. குறிப்பாக அவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்த டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து அவரது நடிப்பில் டிமாண்டி காலனி 3 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. அந்த படம் நல்ல வரவேற்பை அவருக்கு கொடுத்தது. தொடர்ந்து தகராறு நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ஆறாது சினம் இரவுக்கு ஆயிரம் கண்கள் மௌனகுரு பிருந்தாவனம் உள்ளிட்ட பல படங்களில் அருள்நிதி நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான அருள்வான் என்ற படத்தில் அருள்நிதி கலெக்டராக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது. வழக்கமாக ஹாரர் படங்களில் நடித்து வரும் அருள்நிதி இதுபோன்ற கேரக்டர்களிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது பம்பர் படத்தின் இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் நடிகர் சசிகுமார் இந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்தது, கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போன நிலையில் இயக்குனர் அமீர் அந்த கேரக்டரில் இப்போது நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்துக்கு தற்போது வேட்டசாமி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் இந்த டைட்டிலை தேர்வு செய்துள்ளார். அவர் படத்தில் வரும் பாடல்களை கம்போசிங் செய்தபோது பாடல் வரிகளில் இருந்த இந்த வேட்டசாமி என்ற வார்த்தை மிகவும் பிடித்துப் போனதால் படத்தின் கதைக்களத்துக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

படக்குழுவும் இந்த டைட்டில் தான் சரியாக இருக்கும் என்று கூறிய நிலையில் இந்த படத்தின் பெயர் வேட்டசாமி என உறுதியாகி விட்டது. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் இந்த வேட்டசாமி படமும் நடிகர் அருள்நிதிக்கு பெரிய வெற்றியை கொடுக்குமா என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்