சினிமா துறையை பொருத்த வரை சில நடிகர்கள் சில நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக அலட்டலாக நடந்துக்கொள்வார்கள். இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்களிடம் கெத்து காட்டி, தங்களை பற்றி பெருமிதமாக காட்டிக் கொள்வார்கள். இது சினிமாத்துறையில் பலரும் பார்த்த விஷயம்தான். இப்படி பலரது பந்தா படப்பிடிப்புக்குழு சார்ந்த பலரையும் எரிச்சலடைய செய்யும்.
ஆனால் ரஜினி கமல் விஜய் அஜீத் விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள், குஷ்பு மீனா ராதிகா திரிஷா போன்ற பல முன்னணி நடிகைகள் இன்னும் தமிழ் சினிமா பீல்டில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் படப்பிடிப்பு தளத்தில் காட்டும் பணிவும், நிதானமும், நடந்துக்கொள்ளும் விதமும் பாராட்டுக்குரியதாக உள்ளது.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னமும் படப்பிடிப்பு தளத்தில் கேரவன் வேனுக்கு செல்வதாக இருந்தால் கூட, இயக்குனரிடம் சொல்லி பர்மிசன் கேட்டுவிட்டுதான் செல்வார். விஜய், இயக்குனர் சொல்கிறபடி மட்டுமே நடந்துக்கொள்வார். அஜீத்குமார், படப்பிடிப்பு குழுவுக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்.
நடிகை நயன்தாரா, தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அவர் நடித்த சில படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்திலும், கவினுடன் ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர் பார்ப்பதற்காக ஒரு மானிட்டர் இருக்கும். ஒரு காட்சியை எடுத்த பிறகு அது சரியாக வந்துள்ளதாக என்பதை பார்க்கவும், ஒருவேளை சரியாக வரவில்லை என்றால், அந்த காட்சியை ரி ஷூட் செய்யவும் இந்த மானிட்டர் வசதி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது வழக்கம்.
இப்போது நடிகை நயன்தாரா, அவர் நடிக்கும் படங்களில் இன்னொரு மானிட்டர் வசதி இருக்க வேண்டும். அதில் என்னுடைய மேக்கப் மேன், ஹேர் டிரஸ்சரர் நான் நடித்த காட்சிகளை பார்த்து ஓகே சொல்ல வேண்டும். அப்படி சரியாக காட்சி வராவிட்டால் மீண்டும் ரி ஷூட் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். தனக்கென தனியாக ஒரு மானிட்டர் வேண்டும் என்று கூறும் நயன்தாராவின் இந்த கண்டிஷனை கேட்டு இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள் ஏகப்பட்ட கடுப்பில் உள்ளனர்.





