- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் பிரபுதேவாவும் வடிவேலுவும் எனக்கு செய்ததை மறக்க முடியாது - சென்னையில் நடந்த விழாவில் இந்தி...

நடிகர்கள் பிரபுதேவாவும் வடிவேலுவும் எனக்கு செய்ததை மறக்க முடியாது – சென்னையில் நடந்த விழாவில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே பிற மொழி நாயகிகளுக்குதான் பெரிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கிறது. ஏனெனில் கவர்ச்சியில் பிறமொழி நடிகைகள் அளவுக்கு ரசிகர்களுக்கு தமிழ் நடிகைகள் பெரிய உற்சாகத்தை தருவது இல்லை. அதனால் மலையாளம் தெலுங்கு இந்தி கன்னடம் மொழிகளில் இருந்து வரும் தமிழுக்கு வரும் நாயகிகள் எளிதில் ஜெயித்து விடுகின்றனர்.

உதாரணமாக அம்பிகா ராதா ரேவதி நதியா ஊர்வசி அமலா குஷ்பு ரோஜா மீனா ரம்பா நக்மா கீர்த்தி சுரேஷ் மமிதா பைஜூ பூஜா ஹெக்டே தமன்னா ஹன்சிகா மோத்வானி என தமிழ் சினிமா ஹிட் படங்களின் லிஸ்ட்டை பார்த்தாலே பிற மொழி நடிகைகள்தான் அதிகளவில் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றிருப்பது தெரிய வருகிறது.

- Advertisement -

உதாரணமாக தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுக்கு கூட தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அப்படி தமிழில் நடிக்க வந்த பல வாரிசு நடிகைகள், ஒரு கட்டத்தில் வேறு மொழிகளுக்குச் சென்று அங்கு பெரிய அளவில் வரவேற்பை ஆதரவை பெற்றனர். ஆனால் தமிழில் அவர்களால் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற முடியவில்லை.

அந்த வகையில் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு எஸ்ஜே சூர்யா நடித்த குஷி படத்தில் ஒரு பாட்டுக்கு நடிகர் விஜயுடன் நடனம் ஆடியிருந்தார். நல்ல அழகும் திறமையான நடிப்பும் நடனத்திலும் சிறந்து விளங்கிய ஷில்பா ஷெட்டி தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை.

- Advertisement -

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா சஞ்சய் தத் ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த படம் கே டி தி டெவில் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாவது, சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். நிறைய முறை படப்பிடிப்புக்காக சென்னைக்கு நான் வந்திருக்கிறேன்.

சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு மசாலா தோசை. தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நான் நடித்த போது நடிகர்கள் பிரபுதேவாவும் வடிவேலுவும் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தனர். அது மறக்க முடியாத அனுபவம். குஷி படத்தில் விஜயுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது. தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. அதனால் தான் தமிழில் நான் தொடர்ந்து நடிக்கவில்லை என்று நடிகை ஷில்பா ஷெட்டி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்