- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி ஷூட்டிங்கில் அப்பா பற்றிய பல விஷங்களை ரஜினி என்னிடம் சொன்னார் - கமல்ஹாசன் மகள்...

கூலி ஷூட்டிங்கில் அப்பா பற்றிய பல விஷங்களை ரஜினி என்னிடம் சொன்னார் – கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் – சரிகா தம்பதியின் மகள்கள் ஸ்ருதிஹாசன் அக்சரா ஹாசன். இருவருமே படங்களில் நடிக்கின்றனர். இதில் ஸ்ருதிஹாசன் நடிப்பது மட்டுமின்றி பாடகியாகவும் இருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். தனது அப்பா கமலை போலவே ஸ்ருதிஹாசனும் சினிமாவில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.

தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து புதுமுக நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷூடன் 3 விஷாலுடன் பூஜை விஜயுடன் புலி அஜீத்குமாருடன் வேதாளம் என பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

ஆனால் தமிழில் ஸ்ருதிஹாசனுக்கு பெரிய அளவில் வரவேற்பும் வாய்ப்பும் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவர் தாராள கவர்ச்சி காட்டி நடித்ததால் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார். இந்தியிலும் ஸ்ருதிஹாசனுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்தாண்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து நடித்த ஒரு இசை ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் வெளியிட்டு இருந்தார். இதில் லோகேஷூம் அவரும் நெருக்கமாக காதலர்களாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவான கூலி படத்திலும் ஸ்ருதிஹாசனை லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, கூலி படத்தில் ரஜினிகாந்துடன் முதன்முறையாக நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பாவுக்கும் அவருக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ரஜினியை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் கூலி படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது.

அவரிடம் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவ்வளவு எளிமையாக இருப்பார். அதேசமயம் பயங்கர ஷார்ப்பாக இருப்பார். முக்கியமாக அனைவரிடமும் மிகவும் கனிவாகத்தான் நடந்து கொள்வார். என்னுடைய அப்பா பற்றிய பல விஷயங்களை கூலி செட்டில் அவர் என்னிடம் பேசியிருக்கிறார் என்று கமல் மகள் சுருதிஹாசன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்