இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற 14ம் தேதி கூலி படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் நாகர்ஜூனா அமீர்கான் உபேந்திரா சௌபின் சாஹிர் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசனே ஸ்ருதிஹாசனை பாராட்டுவார் என்று கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக மேடையில் கூறியிருந்தார். இந்த படத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகளுக்கு பெரிய வாய்ப்பு இருப்பதில்லை. அதற்கு ஸ்ருதிஹாசனும் விதிவிலக்கல்ல. இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழி பட நாயகிகளுக்கு கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும் தமிழ்நாட்டை சேர்ந்த நாயகிகளுக்கு தமிழ் சினிமாவில் கிடைப்பது இல்லை.
அதனால்தான் நடிகை ஸ்ருதிஹாசன், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். எனினும் தமிழில் அவர் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். அதற்கு கூலி படம் அவருக்கு பக்கபலமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கூலி படத்தில் நடிக்க சம்மதித்தது குறித்து சமீபத்தில் ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, என்னோட இனிமேல் மியூசிக் ஆல்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிச்சா பொருத்தமாக இருக்கும் என்று நினைச்சேன். ஏனென்றால் ஒரு முறை விக்ரம் படத்தோட சூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருந்தேன். லோகேஷ் கனகராஜை திரையில் பார்த்தால் ஒரு வைப் இருக்கும் என்று தோன்றியது.
லோகேஷிடம் இதுபற்றி சொன்ன போது முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னார். அப்புறம் ராஜ்கமல் தயாரிப்பு என்றதும் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று கூறிவிட்டார். ஆனால் உங்க கிட்ட ஒரு படம் பத்தி பேசணும். டைட்டில் இன்னும் முடிவு செய்யலே. அது ரஜினி சார் படம். நீங்க நடிச்சா நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் இப்போ நான் நடித்திருக்கிற கூலி படம் என்று நடிகை ஸ்ருதிஹாசன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.





