- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 45 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட திடீர் விபரீதம்… அந்த பெண்ணுக்கு என்னாச்சு? - டைரக்டர்...

சூர்யா 45 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட திடீர் விபரீதம்… அந்த பெண்ணுக்கு என்னாச்சு? – டைரக்டர் ஹீரோ இதையெல்லாம் யோசிக்க மாட்டாங்களா?

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாகிறது. கடந்த பல ஆண்டுகளாக தொடர் தோல்வி படங்களை தந்துவரும் நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும், நிச்சயம் வெற்றிப் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்த படத்தில் திரிஷா ஷிவதா சுவாசிகா யோகிபாபு நட்டி மன்சூர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

- Advertisement -

சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னை ஈசிஆரில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதில் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டுடியோவில் 500 பேர் நடனமாடும் அளவுக்கு ப்ளோர் வசதி இல்லை.

அதனால் அங்குள்ள வெட்டவெளி மைதானத்தில் நடனக் கலைஞர்கள் 500 பேர் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இப்போது கோடை காலம் என்ற நிலையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சூரியனின் வெப்பக் கதிர்கள் மக்களை சுட்டெரித்து வருகின்றன. இரவுகளில் வீடுகளில் புழுக்கமும் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு தட்பவெப்ப சூழலில், வெட்ட வெளியில் மைதானத்தில் இப்படி பாடல் காட்சியை படமாக்கியதால், அப்போது நடனமாடிய 500 பேரில் பெண் ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். அவரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் அந்த பெண் குறித்த தகவலில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஒரு பாடல் காட்சியில் 500 பேர் என்பதே தேவையில்லாத ஒன்று. அதில் 100 பேர் கூட திரையில் தெரியப் போவது இல்லை. தற்போது சுட்டெரிக்கும் வெயில் காலத்தில், வெட்ட வெளியில் 500 பேரை கொதிக்கும் சூட்டில் ஆட விட்ட இயக்குனர் மற்றும் ஹீரோவுக்கு அவர்களது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து யோசிக்க கூட தெரியாதா, காலை 9 மணிக்குள் அல்லது பிற்பகல் 4 மணிக்கு பிறகு படப்பிடிப்பை நடத்தும் யோசனை கூட வராதா என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்