- Advertisement -
Homeபொழுதுபோக்கு30 ஆண்டுகளுக்கு முன் வள்ளி கற்றுத் தந்த பாடத்தை மறக்காத ரஜினி, அதிரடி கிளப்பிய லால்...

30 ஆண்டுகளுக்கு முன் வள்ளி கற்றுத் தந்த பாடத்தை மறக்காத ரஜினி, அதிரடி கிளப்பிய லால் சலாம் – வரும் 21ம் தேதி நடக்குது தரமான சம்பவம்

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி லால் சலாம் டீசர் வெளியானது. அதே போல் தசெ ஞானவேல் இயக்கிய படத்தின் டை்டடில் வேட்டையன் என்ற பெயருடன் டீசரும் வெளியானது. இந்த தரமான சம்பவங்களால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

வேட்டையன் பட டீசரில், குறி வெச்சா இரை விழணும் என்ற ஒரு மாஸ் டயலாக்கிலேயே ரஜினி, வேற லெவலில் அந்த படத்தை காட்டிவிட்டார். இது டிரெய்லர்தான், இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு என்ற படையப்பா பட ஸ்டைலில் வேட்டையன் பட டீசர் ரசிகர்களை உற்சாகமடைய செய்து விட்டது.

- Advertisement -

ஆனால் வேட்டையன் படத்தை காட்டிலும் லால் சலாம் படத்தின் டீசர் இன்னும் ரசிகர்களை அதிகமாக ஈர்த்துவிட்டது. கேமியோ ரோலில்தான் ரஜினி இந்த படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் 22 காட்சிகளில் ரஜினி வருவதாகவும் 45 நிமிடங்களுக்கு மேல் படத்தில் இருப்பதும் உறுதியானதால் இது ரஜினி படமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 1990களில் வெளிவந்த படம் வள்ளி. இந்த படம் தன்னுடன் இன்ஸ்டிடியூட்டில் படித்த நண்பர்களுக்கு உதவுவதற்காக ரஜினி கேமியோ ரோலில் நடித்த படம். சில காட்சிகளில் மட்டுமே ரஜினி வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

அதனால் வள்ளி படத்தை போன்ற ஒரு நிலமை, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ரஜினி, பல காட்சிகளில் தானாக முன்வந்து நடித்துக்கொண்டு மகளை ஒரு சிறந்த இயக்குநராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக வரும் 21ம் தேதி சென்னையில் சாய்ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டு பேச உள்ளார். ஏனெனில் அவர் பேசும் கண்டென்ட் எப்படியும் டிரண்டிங் ஆகி, ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும். லால் சலாம் படத்துக்கும் அது ஒரு பெரிய பிரமோ வாக இருக்கும் என்பதால் அதிரடி காட்ட களம் இறங்க தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்