- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு அண்ணியாக நடிக்க வந்த வாய்ப்பு... வேண்டாம் என்று ஒதுங்கிய நடிகை... அடுத்து நிகழ்ந்தது அற்புதம்...

விஜய்க்கு அண்ணியாக நடிக்க வந்த வாய்ப்பு… வேண்டாம் என்று ஒதுங்கிய நடிகை… அடுத்து நிகழ்ந்தது அற்புதம்…

- Advertisement -

நடிகர் விஜய்யை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கியவர் செல்வபாரதி. இதில் நினைத்தேன் வந்தாய் திரைப்படம் இவர்களது கூட்டணியில் முதல் படமாக வெளிவந்தது. முக்கோண காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த நேரத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இந்த திரைப்படம் உதவியது.

இரண்டாவதாக விஜய் செல்வ பாரதி கூட்டணியில் வெளியான திரைப்படம் பிரியமானவளே. மேரேஜ் அக்ரீமெண்ட் என புதுமையான ஒரு கான்செப்ட் கொண்டு வந்து, அந்த சமயத்திலேயே வித்தியாசமான காதல் கதையை கொடுத்திருந்தார் செல்வ பாரதி. படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கப் போகிறது என முன்கூட்டியே நமக்கு தெரிந்தாலும், காட்சிக்கு காட்சி காதல் நிறைந்த சுவாரஸ்யம் படத்தில் இருந்ததால் பிரியமானவளே வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் பிறகு மூன்றாவது முறையாக விஜய் – செல்வ பாரதி கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வசீகரா. இந்தத் திரைப்படமும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட, அது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. அதனால் கலவையான விமர்சனத்தையே இந்த திரைப்படம் பெற்றது. 2003 ஆம் ஆண்டு வசீகரா திரைப்படம் வெளியாகி இருந்தது.

இப்படியான சூழலில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை சினேகா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தின் கதாநாயகியாக அவர் நடித்து வருகிறார். சினேகா மட்டுமல்லாமல், லைலா, மீனாட்சி சவுத்ரி, இவானா, பார்வதி நாயர், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், யுகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் படத்தில் நடித்து வரும் சினேகா, தனது கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று கூறியிருந்தார். விஜய்யுடன் அவர் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார். முன்னதாக விஜய்யின் திரைப்படத்தில் சினேகா நடிக்க மறுத்த தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தில்தான் சினேகாவுக்கு இந்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

குடும்ப பின்னணியில் உருவான அந்த திரைப்படத்தில், விஜய்க்கு அண்ணி கதாபாத்திரத்தில் முதலில் சினேகாவை நடிக்க தான் அழைத்துள்ளார்களாம். ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என ஒதுக்கி இருக்கிறார் சினேகா. இதனைத் தொடர்ந்து, சங்கீதா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். நல்ல வேலையாக அந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என மறுத்ததால்தான், தற்போது விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க முடிந்ததாக சினிமா வட்டாரத்தில் பலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்