- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா … என்னாச்சு என பதறிப்போன தமிழ் சினிமா ரசிகர்கள்...

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா … என்னாச்சு என பதறிப்போன தமிழ் சினிமா ரசிகர்கள் – டாக்டர்கள் சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர்தான் இயக்குனர் பாரதிராஜா. கடந்த 1980 90களில் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் வெற்றிப் படங்களாக இருக்கின்றன. குறிப்பாக 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் அலைகள் ஓய்வதில்லை கிழக்கு சீமையிலே கருத்தம்மா சிவப்பு ரோஜாக்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

வில்லன் நடிகராக இருந்த சத்யராஜை கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாற்றியவர் பாரதிராஜா தான். பாசமலர் படத்துக்கு பிறகு திரையில் அண்ணன் தங்கை பாசத்தை அழுத்தமான சொன்ன படம்தான் கிழக்கு சீமையிலே. என் இனிய தமிழ் மக்களே என்ற ஒலிக்கும் அவரது வார்த்தைகளை அவரது கம்பீர குரலில் கேட்பதே ரசிகர்களுக்கு பெரிய சுகம்தான்.

- Advertisement -

தமிழ் திரைப்படம் என்றால் இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்று நெறிமுறைகளை கடந்த கிராம மக்களின் வாழ்க்கை சம்பவங்களை திரைக்கு கொண்டு சினிமாவின் அடுத்த நகர்வுக்கு வித்திட்ட பெருமைக்கு சொந்தக்காரர் பாரதிராஜா. 16 வயதினிலே அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு பிறகு, இனி நான் என் வழக்கமான பாணியில் நடித்தால் அந்த படங்கள் ஓடாது. அடுத்த கட்டத்துக்கு பாரதிராஜா சினிமாவை கொண்டு போய் விட்டார் என்று எம்ஜிஆரே பாரதிராஜாவை வெளிப்படையாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் குமார் திடீரென உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவால் மிகவும் மனம் உடைந்துபோன பாரதிராஜா சில காலம், தனது மகளது வீட்டில் வெளிநாட்டில் இருந்தார். சமீபத்தில்தான் சென்னை திரும்பிய நிலையில் தனது வீட்டில் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளாக பாரதிராஜா நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நம்ம வீட்டுப்பிள்ளை திருச்சிற்றம்பலம் மகாராஜா குரங்கு பொம்மை போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருந்தார். ஆனால் மகன் மனோஜ்குமாரின் மறைவுக்கு பிறகு அவர் படங்களில் நடிக்காமல் முழுநேர ஓய்வில் இருந்து வருகிறது. வயதும் 84 ஆன நிலையில் அடிக்கடி உடல் நலமும் அவருக்கு பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்