- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணா படத்தில் சீதை கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது ஏன்? அந்த நடிகர்தான் காரணம்...

இராமாயணா படத்தில் சீதை கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது ஏன்? அந்த நடிகர்தான் காரணம் என நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஓபன்டாக்!

- Advertisement -

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. தமிழில் மாரி 2 என்ஜிகே கார்கி அமரன் படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற சாய்பல்லவி இப்போது இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இராமாயணா படத்தில் சீதையாக நடித்து வருகிறார். ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது கேஜிஎப் நாயகி ஸ்ரீநீதி ஷெட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் பவால் மற்றும் சிச்சோரோ ஆகிய படங்களை இயக்கியவர் நிதிஷ் திவாரி. இப்போது அவர் இராமாயணா என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ராமர் கேரக்டரில் ரன்வீர் கபூர் சீதாவாக சாய் பல்லவி மற்றும் இராவணன் கேரக்டரில் யஷ் நடிக்கின்றனர்.

- Advertisement -

அதேபோல் அனுமன் வேடத்தில் சன்னி தியோல், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

இராமாயணா படத்தில் சீதாவாக நடிப்பதற்காக ஆடிஷனில் முதலில் கேஜிஎப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தான் பங்கேற்றார். ஆனால் ஆடிஷனில் அவர் தேர்வாகவில்லை. அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவி, சீதா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இராமாயணா படத்தில் தனக்கு சீதை கேரக்டரில் நடிக்க இருந்த வாய்ப்பு கைநழுவியது குறித்து ஒரு நேர்காணலில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கூறியதாவது, இராமாயணா படத்தில் சீதா வேடத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றிருந்தேன். மூன்று காட்சிகளை நடித்துக் காட்டச் சொன்னார்கள். என் நடிப்பு அங்கிருந்த அனைவருக்குமே பிடித்திருந்தது. அடுத்த ஓரிரு மாதங்களில் கேஜிஎப் படம் வெளியானது. அதில் யஷ் ஜோடியாக நான் நடித்திருந்தேன்.

இந்நிலையில் இராமாயணா படத்தில் யஷ், இராவணன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இராவணனாக யஷ் சீதாவாக நானும் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்காகவே படக்குழுவினர் எனக்கு வாய்ப்பளிக்காமல் விட்டிருக்கலாம். அதற்குப் பிறகு சீதாவாக சாய் பல்லவி தேர்வானதாக கூறப்பட்டது. அந்த கேரக்டரில் சாய் பல்லவி நல்ல சாய்ஸ் என்றுதான் நான் நினைக்கிறேன் என்று நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்