- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சுகன்யாவின் செகண்ட் இன்னிங்க்ஸ், புதிய அவதாரம் எடுத்து கம்பேக் கொடுக்கப்போறாராம், வேற லெவலா இருக்கும்...

நடிகை சுகன்யாவின் செகண்ட் இன்னிங்க்ஸ், புதிய அவதாரம் எடுத்து கம்பேக் கொடுக்கப்போறாராம், வேற லெவலா இருக்கும் போலயே

- Advertisement -

1990களில் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகையாக திகழ்ந்தவர் சுகன்யா. இவர் பாரதிராஜா இயக்கிய “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் சுகன்யா நடித்துள்ளார்.

தமிழில் “சின்னக் கவுண்டர்”, “திருமதி பழனிச்சாமி”, “செந்தமிழ் பாட்டு”, “இளவரசன்”, “வால்டர் வெற்றிவேல்” போன்ற பல திரைப்படங்களில் சுகன்யா நடித்திருந்தாலும் “இந்தியன்” திரைப்படத்தில் சுகன்யாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

எப்போதும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கான மார்க்கெட் சரிவது வழக்கம். சுகன்யாவுக்கும் அது போல் நடந்தது. அந்த சமயத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் சுகன்யா.

சமீபத்தில் கூட இயக்குனர் சேரன் இயக்கி நடித்த “திருமணம்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்திருந்தார். இந்த நிலையில் சுகன்யா தற்போது புது அவதாரத்தில் கம்பேக் கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது.

அதாவது மலையாளத்தில் “டிஎன்ஏ” என்று ஒரு திரைப்படம் உருவாகி வருகிறதாம். அந்த திரைப்படத்தில் சுகன்யா ஒரு தமிழ் பாடலை எழுதியுள்ளாராம். அத்திரைப்படத்தில் தமிழ்நாடு சம்பந்தமான சில காட்சிகள் வருகிறதாம். அதில் ஒரு தமிழ்பாடலும் இடம்பெறுகிறதாம்.

இந்த நிலையில் சுகன்யா, அந்த தமிழ் பாடலை எழுதியுள்ளாராம். இந்த பாடல் ஒரு வேளை ஹிட் அடித்துவிட்டால் நிச்சயம் தமிழ் சினிமாவில் சுகன்யா பாடலாசிரியராக ஜொலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்