- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் இருந்த இடத்தை பினாயில் ஊத்தி தான் கழுவிவிடணும்… அப்படி டபுள் மீனிங் பேசுவார் -...

அவர் இருந்த இடத்தை பினாயில் ஊத்தி தான் கழுவிவிடணும்… அப்படி டபுள் மீனிங் பேசுவார் – சீனியர் நடிகை சுமித்ரா சொல்றது இந்த நாயகனையா?

- Advertisement -

கடந்த 1970 – 80களில் பல படங்களில் அன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுமித்ரா. குறிப்பாக சிவக்குமார் ஜெய்சங்கர் கமல்ஹாசன் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பிறகு அக்கா அண்ணி வேடங்களில் பல படங்களில் சுமித்ரா நடித்தார். இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு சுமித்ரா அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக கன்னிராசி படத்தில் பிரபுவுக்கு அக்காவாக, ரேவதிக்கு அம்மாவாக கவுண்டமணியின் மனைவியாக சுமித்ரா நடித்திருப்பார். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருப்பார். பணக்காரன் படத்தில் ரஜினியின் அம்மா சுமித்ரா தான். இப்படி அஜீத்குமார் விஜய் தனுஷ் என முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு அம்மாவாக சுமித்ரா பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை சுமித்ரா கூறியதாவது, சிங்கார வேலன் படத்தில் நான் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்திருப்பேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் அம்மா அம்மா என்று கத்திக்கொண்டு கமல் ஓடி வர வேண்டும். ஆனால் கமல், அம்மா அம்மா என்று கூப்பிடாமல் சுமி சுமி என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதற்கு கமலிடம் நான், அடி வாங்குவே இப்ப நான் உனக்கு அம்மாவா நடிக்கிறேன். அம்மா அம்மா என்று கூப்பிடு என்று சொன்னேன். அதற்கு கமல்ஹாசன் கோபப்படுவார். எனக்கு காதலியாக நடித்த பொண்ணை இப்போது அம்மான்னு எப்படி கூப்பிடுறது? ஏன் இப்படி பண்றீங்கன்னு இயக்குனரிடம் கோபப்படுவார்.

- Advertisement -

அதுபோல கமல்ஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அவ்வளவு பேசுவார். அதிகமாக இரட்டை அர்த்த வார்த்தைகள் தான் அவர் பேசுவார். அவர் இருக்கிற இடத்தை கண்டிப்பாக பினாயில் ஊத்தி தான் கழுவி விடணும். அவ்வளவு மோசமாக கமல் பேசுவார். ஆனால் அது ஜாலியாக தான் இருக்கும் என்று சீனியர் நடிகை சுமித்ரா கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக கமல்ஹாசன் பேசுவதே புரியவில்லை என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். குறிப்பாக பார்லிமென்டில் அவர் பேசியது குறித்தும் பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் சீனியர் நடிகை சுமித்ரா, கமல் வாயை திறந்தாலே டபுள் மீனிங்கில் தான் பேசுவார். அவர் இருந்த அந்த இடத்தையே பினாயில் ஊத்தி கழுவி விட வேண்டும் என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்களுக்கு திகைப்பை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்