- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரவு டின்னர் சாப்பிட அழைத்தார் என்று நம்பி போனேன்… கடைசியில் இப்படி ஒரு அதிர்ச்சியா? -...

இரவு டின்னர் சாப்பிட அழைத்தார் என்று நம்பி போனேன்… கடைசியில் இப்படி ஒரு அதிர்ச்சியா? – தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். நேற்று அவரது தவெக கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழா சென்னையில் உள்ள பனையூரில் தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் தவெக தான் வருகிற தேர்தலில் ஜெயித்து ஆட்சியமைக்கும் என்று உறுதியாக கூறினார்.

சமீபத்தில் அவர் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வராமல் சென்சார் விவகாரத்தில் சிக்கியுள்ளது. இது விஜய் ரசிகர்களை அதிருப்தியைட செய்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் பெரிய அளவில் கவலைப்படவில்லை. அதனால் நேற்றைய விழாவில் அவர் பாடகர் வேல்முருகன் பாடிய பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி தனது கட்சி நிர்வாகிகளை தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

- Advertisement -

நடிகர் விஜய் அரசியல் தலைவராக மாறிய பிறகும் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் பெரிய விருப்பமாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு படம் இல்லை என்றாலும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் விஜய் நடிக்க வேண்டும். முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தாமல் அவ்வப்போது சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதுவரை நடிகர் விஜய் 69 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஜனநாயகன் மட்டும் இன்னும் திரைக்கு வரவில்லை. அவர் 33 ஆண்டுகளில் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தில் சிவகாசி என்ற கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். பிரகாஷ் ராஜ் வில்லனாக இருப்பார். அசின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் விஜய்க்கு ஆதரவை பெற்றுத் தந்தது.

- Advertisement -

சிவகாசி படத்தின் இயக்குனர் பேரரசு. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது இயக்குனர் பேரரசு கூறியதாவது, சிவகாசி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது ஒருநாள் விஜய் சார் என்னை இரவு அவரது வீட்டுக்கு டின்னர் சாப்பிட அழைத்தார். நானும் அவரது வீட்டுக்குச் சென்றேன். அவரே அவர் கையால் எனக்கு தோசை சுட்டுக் கொடுத்தார். சந்தோஷமாக இருவரும் சாப்பிட்டோம்.

பிறகு நான் வீட்டுக்கு புறப்பட வெளியே வந்த போது என் கையில் அவர் ஒரு சாவியை திடீரென கொடுத்தார். இது உங்களுக்கு தான் என்னுடைய அன்பான பரிசு என்று சொன்னார். வெளியே ஒரு புது கார் நின்றிருந்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. டின்னருக்கு சாப்பிட கூப்பிட்டு விட்டு இப்படி ஒரு காரை பரிசாக தருவார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. அப்படி ஒரு தங்கமான மனசுக்காரர் தளபதி என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்