- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் பிரபல நடிகைக்கு நிச்சயதார்த்தமா... அது சரி யாரை கரம் பிடிக்கிறார் தெரியுமா...

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைக்கு நிச்சயதார்த்தமா… அது சரி யாரை கரம் பிடிக்கிறார் தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு தற்போது திருமண காலம் என்று கூறலாம். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த, பிரேம்ஜி அமரனுக்கு வரும் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. காதலித்த பெண்ணையே அவர் கரம்பிடிக்க இருக்கிறார். திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது.

 

இதே போல் நடிகர் அர்ஜுனின் மகள் மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த வரிசையில் தற்போது நடிகை சுனைனா இணைந்து இருக்கிறார். அவருக்கு, அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

 

முதலில் மாடல் துறையில் இருந்து அங்கிருந்து திரைத்துறைக்கு வந்தவர் நடிகை சுனைனா. 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமரி திரைப்படம் மூலம் சினிமாவில் அவர் அறிமுகமானார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு, தமிழில் காதலில் விழுந்தேன் திரைப்படம் நல்ல என்ட்ரியை கொடுத்தது.

 

2008 ஆம் ஆண்டு அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியானது. நகுல் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படம் ஆகும். அதில் ஏற்கனவே வெளியான நாக்க முக்க திரைப்பட பாடல், மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் காரணமாக அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

சுனைனாவுக்கும் இந்த திரைப்படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. பிறகு, மாசிலாமணி, வம்சம், யாதுமாகி, திருத்தணி போன்ற திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார். சீனு ராமசாமி இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்த நீர்ப்பறவை திரைப்படம் சுனைனாவின் நடிப்பிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அவரால் முன்னணி நடிகையாகும் உயரத்தை அடைய முடியவில்லை.

 

பட வாய்ப்புகள் குறைந்தாலும் கிடைத்த, கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர் நடித்து வந்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்னும் வெப் சீரிஸ் வெளியானது. இந்த நிலையில் திரை உலகில் இருந்து அவர் குடும்ப வாழ்க்கைக்கு பயணமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கரம் பிடித்திருப்பது போல ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அவர் யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

 

சற்று முன்