தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. கல்லூரி வியாபாரி பையா தில்லாலங்கடி அயன் சுறா படிக்காதவன் கத்திசண்ட தர்மதுரை ஸ்கெட்ச் தேவி தேவி 2 கண்டேன் காதலை வேங்கை சிறுத்தை வீரம் தோழா அரண்மனை 4 என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
விஜய் அஜீத்குமார் சூர்யா ரவி மோகன் சியான் விக்ரம் தனுஷ் கார்த்தி பரத் விஷால் விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை தமன்னா, தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அங்கும் பிரபலமானார். தமிழ் தெலுங்கு மொழிகளை தொடர்ந்து இந்தியிலும் தமன்னா நுழைந்தார்.
இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விஜய் வர்மா என்பவருடன் நடித்தார். உதட்டு முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் தமன்னா காட்டிய தாராளத்தை பார்த்து பாலிவுட் ரசிகர்களே மிரண்டு போய்விட்டனர். அந்தளவுக்கு எல்லை தாண்டிய கவர்ச்சியில் தமன்னா இந்தியில் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
இதற்கிடையே ஜெயிலர் படத்தில் தமன்னா போட்ட காவாலய்யா குத்தாட்டமும் பெரிய அளவில் வைரலாகி அவரது இமேஜ் வேற லெவலுக்கு சென்றது. பிறகு வெப் சீரிஸ் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் வயப்பட்ட தமன்னா, அவருடன் 3 ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமான நட்பில் இருந்தார். இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்றனர்.
ஆனால் தற்போது தமன்னா, விஜய் வர்மா காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வேறு ஒரு நடிகையுடன் விஜய் வர்மா நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா, தனது எக்ஸ் பக்கத்தில் செய்த பதிவில் கூறியிருப்பதாவது, இது கண்டுபிடிக்கும் கட்டம். நீங்கள் பாதி வடிவமைப்பாளராகவும் பாதி துப்பறியும் நபராகவும் இருக்கும் கட்டம். ஒவ்வொரு விவரமும் முக்கியமானது. ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது. யோசனைகள் ஒட்டும் காகிதங்களில் வாழ்கின்றன.
இது இன்னும் சரியாகவில்லை. ஆனால் அது அதன் வழியில் உள்ளது. நேர்மையாக சொன்னால் இதுதான் மந்திரம். ஒவ்வொரு பளபளப்பான பொருளுக்கு பின்னால் ஒரு பளபளப்புற்ற செயல்முறை உள்ளது. முடிவுகளும் சந்தேகங்களும் இதுதான். அந்தப் பகுதி அறிவார்ந்த குழப்பமான உற்சாகமான நடுப்பகுதி என்று குறிப்பிட்டுள்ளார். தமன்னாவிற்கு கிடைத்த ஏதோ சில அனுபவங்கள் இப்படி ஒரு தத்துவ பதிவை செய்ய வைத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





