ஒரு படம் உருவாவதில் பல்வேறு சிரமங்களும் சிக்கல்களும் இருக்கின்றன. அப்படியே ஒரு படம் உருவாகி விட்டாலும் திரைக்கு வருவதில் பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணமாக நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தை சொல்லலாம். அஜீத்குமார் போன்ற டாப் ஸ்டார் நடிகருக்கே இப்படி ஒரு நிலை என்றால், மற்ற நடிகர்களின் நிலை சொல்லத் தேவையில்லை.
அதே போல் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்களில் மதகஜ ராஜா படமும் ஒன்று. இந்த படம் கடந்த 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் நடித்த இந்த படமும் 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வருவதும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருகிறது.
நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க கமிட் ஆகி சில வாரங்கள் நடித்துவிட்டு வெளியேறி விட்டார். இப்போது அந்த கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதே போல் பாலா இயக்கிய வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்திருக்கிறார்.
அதே போல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் முதலில் நடித்தது நடிகர் அஜீத்குமார் தான். ஆனால் மொட்டையடிக்க வேண்டும் என்றவுடன் அந்த படத்தில் இருந்து விலகினார். பிறகு அந்த கேரக்டரில் சூர்யா நடித்தார். உன்னை நினைத்து படத்தில் விக்ரமன் இயக்கத்தில் நடித்த விஜய் விலகியதால், பிறகு சூர்யா நடித்தார்.
இப்படி ஹீரோ ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி பிறகு விலகுவது சகஜமாக நடக்கிற ஒன்றுதான். இயக்குனர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜீத்குமார்தான். அதற்காக தான் நீண்ட தலைமுடி எல்லாம் வளர்த்திருந்தார். திருப்பதி படத்தில்கூட அந்த கெட்டப்பில் இருப்பார். ஆனால் அவர் விலகியதால், பிறகு ஆர்யா நடித்தார்.
இப்போது மற்றொரு புதிய தகவலும் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்ததும் அஜீத்குமார்தான். அதற்கான போஸ்டரை கூட படக்குழுவினர், மே 1 அஜீத்குமார் பிறந்த நாளின்போது வெளியிட்டுள்ளனர். ஆனால் அப்போதும் பாலா – அஜீத் கூட்டணி சேர முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.





