தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ என 5 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். இதில் விமர்சன ரீதியாக மட்டுமே லியோ படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. மற்ற 4 படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.
அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதுவரை ரஜினி கமல் விஜய் கார்த்தி என டாப் ஹீரோக்களை அவர் டைரக்ட் செய்த நிலையில், நடிகர் அஜீத்குமாரை அவர் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, அஜீத்குமாருடன் படம் பண்ணுவது குறித்த விஷயம் சமீபத்துல ஆரம்பிச்சது. 10 மாசத்துக்கு முன்னாடி இதை பத்தி பேசினாம். எனக்கும் அஜீத் சார் கூட ஒரு படம் பண்ணனும் என்ற ஆசை இருக்கு. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவரோட ஆக்சன் சைடை எக்ஸ்போஸ் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கு.
அதுக்கு ஒரு கதையும் முன்னாடி பேசியிருக்கோம். ஆனா இப்போ அவர் கார் ரேஸில் பிஸியா இருக்கிறார். அதில் ரொம்ப ஆர்வமா இருக்கிறார். எனக்கும் கமிட்மென்ட்ஸ் இருக்குது. டைம் செட் ஆகும்போது கண்டிப்பாக அவருடன் செய்வேன். எப்படி சார், அவர் கூட படம் பண்ணாமல் இருக்க முடியும்?
எனக்கும் அஜீத்குமாருடன் படம் செய்தால்தான் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் டாப் நடிகர்களை வைத்து படங்களை பண்ணியதற்காக முழு திருப்தியும் மனதில் ஒரு முழுமையும் ஏற்படும். அஜீத்குமாருக்கான கதை என்னிடம் இருக்கிறது. அதுகுறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் பேசியிருக்கிறேன். சுரேஷ் சந்திராவை எனது ரொம்ப நாளாகத் தெரியும்.
என்னை வாடா போடா என்று உரிமையாக பேசுபவர். என்னோட பர்ஸ்ட் படம் மாநகரம் படத்தில் இருந்தே அவருக்கு என்னை தெரியும். எப்படா இந்த பக்கம் வரப்போறே? அஜீத்குமாரை வெச்சு எப்ப படம் பண்ண போறேன்னு என்கிட்ட கேட்டிருக்கார். சார் என்ன சார் சான்ஸ் கெடைச்சா வந்துடப் போறேன் என்று நான் அவரிடம் சொல்லி இருக்கிறேன். எல்லோருடைய டைமும் ஒத்துவந்தால் அஜீத்குமார் படம் பண்ணிவிடலாம். ரெண்டு பேரும் ஈக்குவலா ப்ரீயா இருக்கிற டைம் வந்தா படம் எடுக்கலாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





