- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் நடிகை திரிஷா… முக்கியமான கோரிக்கை ஏதாவது இருக்குமோ, என...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் நடிகை திரிஷா… முக்கியமான கோரிக்கை ஏதாவது இருக்குமோ, என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 20 ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போதும் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 40 வயது கடந்தும் இன்னும் நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தக்லைஃப் படம் வெளியானது.

இந்தியாவில் உள்ள பல கோவில்களில், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்க கோவில்களுக்கு சொந்தமான யானைகள் இருப்பதும் பராமரிக்கப்படுவதும் அந்த காலத்தில் இருந்தே பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது சமூக நல ஆர்வலர்கள், குறிப்பாக பிராணிகள் நலச் சங்கத்தினர் கோவில்களில் யானைகள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். யானைகள் துன்புறுத்துப்படுவதாக புகார் தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

அவ்வப்போது கோவில் யானைகளுக்கு மதம் பிடிப்பதும் அப்போது பாகன்கள் மிதித்து கொல்லப்படுவதும் தொடர்கிறது. மேலும் பல கோவில்களில் யானைகளின் பராமரிப்பு செலவை சமாளிக்க முடியாமல் கோவில் நிர்வாகமும் தடுமாறுகிறது. இந்த நிலையில் தற்போது கோவில் வாசல்களில் இயந்திர யானைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பார்ப்பதற்கு நிஜமான யானை போல் தோன்றும் இந்த இயந்திர யானைகளுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் உள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கோவிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த இயந்திர யானைக்கு கஜா எனவும் பெயரிடப்பட்டுள்ளது. நிஜ யானையை போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை தனது பெரிய காதுகளையும் தும்பிக்கை வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்குகிறது.

- Advertisement -

இந்த இயந்திர யானை 800 கிலோ எடை கொண்டது. சுமார் 3 மீட்டர் உயரமும் கொண்டதாக பிரமாண்டமாக உள்ளது. இந்த இயந்திர யானை சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையிலும் தன் காதுகள் தலை அனைத்தும் அசையும் விதமாகவும் உண்மையான யானை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள மக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கஜா இயந்திர யானையை திரிஷா வழங்கிய யானை என்றே பெருமிதமாக குறிப்பிடுகிறார்கள். கடந்த 2001ம் ஆண்டில் கேரளா மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு யானையை நன்கொடையாக வழங்கினார். இப்போது அதே பாணியில் நடிகை திரிஷாவும் விருதுநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் முக்கிய வேண்டுதல் எதுவும் இருக்குமோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்