- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் நிச்சயமாக அந்த 2 கேரக்டர் இருக்காதா? முதல் பாகத்துல ரசிகர்கள் மனசுல...

ஜெயிலர் 2 படத்தில் நிச்சயமாக அந்த 2 கேரக்டர் இருக்காதா? முதல் பாகத்துல ரசிகர்கள் மனசுல நின்னவங்களே அவங்கதானேபா…- குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்த படம். அண்ணாத்த படத்தின் சுமாரான வெற்றியால் சோர்ந்து போயிருந்த ரஜினிக்கும் புதிய உற்சாகத்தை, தெம்பை தந்த படமாக ஜெயிலர் இருந்தது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இதுதவிர ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில், கிஷோர், அறந்தாங்கி நிஷா, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

இதுவரை நடிகர் ரஜினிகாந்த் 170 படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் கூலி படம் அவரது 171வது படமாகும். ஆனால் இதுவரை ரஜினி அவர் நடித்த எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஆனால் இப்போது முதல் முறையாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்தான். ஜெயிலர் படத்தை தயாரித்த அவர், 600 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலை அள்ளியதால் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசளித்தார். மேலும் ரஜினியிடம் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

கூலி படப்பிடிப்பை முடித்த பிறகு வருகிற மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடிப்பில் இந்த படம் உருவாகிறது. இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை நெல்சன் முடித்துவிட்ட நிலையில் தற்போது ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

ஜெயிலர் படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் ஜெயிலர் 2 படத்திலும் வருகின்றன. ஆனால் காவலய்யா குத்து பாடலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தமன்னா இந்த 2ம் பாகத்தில் இல்லை. அதே போல் வில்லன் நடிப்பில் அசத்திய மலையாள நடிகர் விநாயகமும் இந்த படத்தில் இல்லை. ஏனென்றால் முதல் பாகத்தில் கிளைமாக்ஸில் அவரை ரஜினி கொன்றுவிடுகிறார். அதனால் மற்ற நடிகர்கள் அனைவரும் இந்த படத்தில் இடம்பெற உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்