- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அரசியலுக்கு வருவீங்களா? - நடிகை திரிஷா சொன்ன வெளிப்படையான பதில்!

நீங்க அரசியலுக்கு வருவீங்களா? – நடிகை திரிஷா சொன்ன வெளிப்படையான பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 23 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் திரிஷா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்போதைய தமிழக முதல்வர் விஜயுடன் திரிஷா இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறார். கில்லி குருவி ஆதி லியோ திருப்பாச்சி ஆகிய படங்களில் விஜய்க்கு அவர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கு விஜய் உடன் இணைந்து நடனமாடி ஒரு குத்தாட்டமும் போட்டிருந்தார்.

- Advertisement -

மேலும் நடிகர் விஜயுடன் அவர் திருமண வரவேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்றார். மேலும் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் தனது கணவர் விஜய் இருப்பதாகவும் சங்கீதா விவகாரத்து மனுவில் கூறியிருந்தார். அது வேறு யாருமல்ல, திரிஷா தான் என்பதை நிரூபிக்க தான் விஜய் – திரிஷா திருமண வரவேற்பில் பங்கேற்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தவெக கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மே 4ம் தேதி, நடிகை திரிஷா நேரடியாக நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு பூங்கொத்துடன் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் 10ம் தேதி நடந்த முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவிலும் முதல் வரிசையில் அமர்ந்து விழாவை பார்த்து ரசித்தார்.

- Advertisement -

முதல்வர் விஜயின் நெருக்கமான நட்பில் உள்ள திரிஷாவும் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை என்ற அரசியல் கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார். அப்போது நடந்த அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவிடம் எதிர்காலத்தில் நீங்க அரசியலுக்கு வருவீங்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு திரிஷா கூறியதாவது, இல்லை சத்தியமாக இல்லை. கேரியரை விட்டுட்டு அரசியலுக்கு போனோலே என்னோட ரியாலிடிடியை விட்டுட்டுதான் போக முடியும். அதனால் எனக்கு அரசியலுக்கு வருகிற எண்ணமே இல்லை என்று திரிஷா கூறியிருக்கிறார். ஆனால் அப்போது தவெக கட்சியை விஜய் ஆரம்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்