தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கியமான, முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். முதல்வசந்தம் படத்தில்தான் இவர் பாண்டியனுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து படிக்காதவன் போன்ற சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார்.
படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர், ரம்யாகிருஷ்ணனுக்கு நல்ல வரவேற்பை, அடையாளத்தை பெற்றுத் தந்தது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே எதிர்க்கும் வில்லி கேரக்டரில் நடித்து அசத்தினார். இதுவரைக்கும் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி என அழைக்கும் அளவுக்கு அந்த கேரக்டரில் நிலைத்து விட்டார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் சோ ராமசாமியின் அக்காள் மகள்தான் ரம்யா கிருஷ்ணன் என்பது பலரும் அறியாத தகவல். அதாவது, ரம்யாகிருஷ்ணனின் சொந்த தாய்மாமா தான் நடிகர் சோ. ஆனால் ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்தது, சோவுக்கு துவக்கத்தில் பிடிக்கவில்லை. பிறகு அவர் பெரிய நட்சத்திரமாக வெற்றி பெற்ற பின் ஏற்றுக்கொண்டார்.
டிவி சீரியல்களிலும் நடித்த ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில், ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மீண்டும் ஜெயிலர் 2 பாகம் எடுக்கப்படும் நிலையில், இதே கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க அந்த படத்திலும் வாய்ப்பு அமையலாம்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்துவந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குநர் வம்சியை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் நடிகையர் அந்தரங்க விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ரம்யாகிருஷ்ணன் குறித்த ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
நடிகை ரம்யாகிருஷ்ணன் ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், நீங்கள் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழவில்லையா, நீங்கள் கணவரை பிரிந்து வாழ்கிறீர்களா என்று கேட்டுவிட்டார். அதற்கு ஆவேசப்பட்ட ரம்யா கிருஷ்ணன், ஏன் நீங்கள் பார்த்தீர்களா, நாங்கள் இருவரும் சேர்ந்துதான் வாழ்ந்து வருகிறேன். அவர் தெலுங்கு படவுலகில் பிஸியாக இருக்கிறார். நானும் நடிப்பதில் பிஸியாக இருக்கிறேன், என்று கோபமாக கூறியிருக்கிறார்.





