- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய திருமணம் நிச்சயதார்தத்துடன் நின்று போனது ஏன்? நடிகை திரிஷா தந்த அதிரடி விளக்கம் -...

என்னுடைய திருமணம் நிச்சயதார்தத்துடன் நின்று போனது ஏன்? நடிகை திரிஷா தந்த அதிரடி விளக்கம் – ஓ…அதுதான் காரணமா?

- Advertisement -

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். லேசா லேசா படம் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக சாமி உனக்கும் எனக்கும் மன்மதன் அம்பு கில்லி திருப்பாச்சி போன்ற படங்களால் திரிஷா முன்னணி நடிகையாக மாறினார்.

தமிழ் சினிமாவில் 40 வயதுகளை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகைகளில் ஒருவராக திரிஷாவும் இருக்கிறார். நடிகை திரிஷா திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இன்னும் அதுபற்றி முடிவு செய்யவில்லை என்பதே நடிகை திரிஷாவின் பதிலாக இருந்து வருகிறது.

சமீபத்தில் தக்லைஃப் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை திரிஷாவிடம் திருமணம் குறித்து கேட்ட போதும், அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் ஜெயலலிதா கோவை சரளா சித்தாரா கவுசல்யா தபு போன்ற சீனியர் நடிகைகள் வரிசையில் திரிஷாவும் திருமணம் செய்யாமலேயே இருந்து விடுவார் போல தெரிகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திருமண ஏற்பாடுகள் நடந்ததும் திருமணம் செய்வதற்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்தும் அவருக்கு திருமணம் நடக்கவில்லை. மோதிரம் மாற்றிய பிறகும் திருமணம் நடக்காமல் நின்று போயிருப்பது குறிப்பிடத்தக்கது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் பல ரசிகர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.

இதுகுறித்து நடிகை திரிஷா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எனது திருமணத்தை நானே நிறுத்தி விட்டேன். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்க கூடாது என எனக்கு கணவராக வர இருந்தவர் கூறினார். ஆனால் நான் நடிப்பை நிறுத்துவதற்கு பதில் திருமணத்தை நிறுத்தி விட்டேன். கர்ப்பமானால் மட்டுமே பிரேக் எடுப்பேன் அதுவும் சினிமாவில் இருந்து விலக மாட்டேன் என்று திரிஷா அதில் கூறியிருக்கிறார்.

நடிகை திரிஷாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. இந்த திருமணம் நடக்காது என நடிகை திரிஷாவே பகிரங்கமாக அறிவித்தார். அந்த காரணத்தை தான் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் நடிகை திரிஷா கூறியிருக்கிறார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சற்று முன்