- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து 2 மாதங்கள் ஸ்பெயின் நாட்டில் தங்கும் நடிகை திரிஷா, குந்தவையின் இந்த திடீர் முடிவுக்கு...

தொடர்ந்து 2 மாதங்கள் ஸ்பெயின் நாட்டில் தங்கும் நடிகை திரிஷா, குந்தவையின் இந்த திடீர் முடிவுக்கு நடிகர் அஜீத்குமார் தான் காரணமாம் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து 20 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பதே சிரமம் என்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக தொடர்ந்து நீடிப்பதே பெரிய சாதனைதான் என திரிஷாவை, நடிகர் விஜய் லியோ பட விழாவில் நேரடியாக பாராட்டி இருந்தார்.

நடிகை திரிஷா லியோ படத்தை தொடர்ந்து, தி கோட் படத்தில் விஜயுடன் மட்ட பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார். விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள திரிஷா, அவரது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய தக்லைப் படத்திலும் திரிஷா நடித்துள்ளார்.

- Advertisement -

திரிஷாவை பொருத்த வரை தமிழ் சினிமா பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். அவருக்கு சாமி படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்து சினிமா பயணத்தை மாற்றியமைத்தது. அதே நேரத்தில் குடிபோதையில் ஈசிஆர் ரோட்டில் நள்ளிரவில் ஆட்டம், ஆந்திராவில் குளியலறையில் வீடியோ, சமீபத்தில் கூவத்தூர் நட்சத்திர ஓட்டல் விவகாரம் என பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்தவர்.

தமிழ் சினிமாவில் சற்று பின்னடவை சந்தித்த நடிகை திரிஷாவுக்கு 96 படம் கைகொடுத்தது. பிறகு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டர், மீண்டும் கம்பேக் ஆக திரிஷாவுக்கு அமைந்தது. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மிக பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் திரிஷா.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் சமீபமாக ஒரு பாலிஸியை பின்பற்றி வருகிறார். ஒரு இயக்குனர் படத்தில் நடித்தால், ஒரு தயாரிப்பாளர்கள் படத்தில் நடித்தால் தொடர்ந்து அவர்களுக்கு 3 படங்கள் என ஒதுக்குவது என்ற ரீதியில் வாய்ப்பு தருகிறார். அதே போல் திரிஷாவுக்கும் இப்போது விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களை போல 3 படங்கள் தருவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது ஸ்பெயின் நாட்டில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் நடிக்க திரிஷா 50 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். மேலும் விடாமுயற்சி படத்துக்காக 10 நாட்கள் ஒரு பாடல் காட்சியில் நடிக்க இருக்கிறார். அதனால் அஜீத்குமார் நடிக்கும் 2 படங்களுக்காக 60 நாட்களை ஒதுக்கி, ஸ்பெயின் நாட்டில் திரிஷா முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்