திரிஷா, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில், முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திரிஷா தமிழில் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சியான் விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்துவிட்டார்.
திரிஷா, இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பு, பொன்னியின் செல்வன் படத்தில் அமோக வரவேற்பை பெற்றது. இப்போது, அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ, திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விடாமுயற்சி படத்தில், அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் விஜய் – திரிஷா ஜோடிக்கு நல்ல காம்பினேஷன் இருந்து வருகிறது. அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால், அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் நல்ல வெற்றியை பெறுகின்றன. ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். குருவி, ஆதி படங்கள் சுமாரான படங்களாக இருந்தாலும், இவர்களது ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப் போனது.
பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவையாக வந்த திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுவிட்டது. அதற்கு பின், லியோ படத்திலும் திரிஷா மிக அழகான குடும்பத் தலைவியாக வந்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அதிலும் விஜய் உடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துவிட்டார்.
இப்போது, லியோ படத்தின் ஒரு வார வசூல் நிலவரம் குறித்த தகவலை, அப்படத்தை தயாரித்த செவன் ஸ்கரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஒரு வாரத்தில் ரூ. 456 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது மற்ற படங்களை காட்டிலும் மிகப்பெரிய வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, தனது இன்டாஸ்கிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தில் ‘அப்படிப்போடு’ என்ற கேப்ஷனில் பகிர்ந்துள்ள திரிஷா, லியோ படத்தில் அவர் விஜய் உடன் நடித்த காட்சிகளின் புகைப்படங்களையும் அதில் பதிவிட்டு உள்ளார். அப்படிப்போடு, போடு, போடு அசத்திப் போடு கண்ணாலே என்ற கில்லி பட பாடலின் முதல் இரண்டு வார்த்தைகளை பதிவிட்டு, விஜய் மீதான தனது நட்பை, சந்தோஷமாக, கொண்டாட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார் திரிஷா. இந்த பதிவு, இப்போது வைரலாகி வருகிறது.





