- Advertisement -
Homeபொழுதுபோக்குமருத்துவரின் மகன் மருத்துவராகும்போது... சினிமாவில் இருப்பவரின் மகன் சினிமாவில் இருக்கக் கூடாதா... விஜய் சேதுபதி மகன்...

மருத்துவரின் மகன் மருத்துவராகும்போது… சினிமாவில் இருப்பவரின் மகன் சினிமாவில் இருக்கக் கூடாதா… விஜய் சேதுபதி மகன் கிடுக்கு பிடி கேள்வி…

- Advertisement -

தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகன் என பெயர் வாங்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது மகாராஜா வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார்.

 

- Advertisement -

விஜய் சேதுபதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் மகன் சூர்யாவை ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வைக்க விஜய் சேதுபதி முயற்சி செய்து வந்தார். முதல் முறையாக தனது மகனை அவர் அறிமுகப்படுத்தியது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் தான்.

 

- Advertisement -

அதில் இளம் வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். ரவுடியாக இருப்பது தான் கெத்து எனும் சிறுவனின் மனநிலையை அந்த கதாபாத்திரம் காட்டும். இதனை மிக இயல்பாகவே செய்திருந்தார் விஜய் சேதுபதியின் மகன். தந்தைக்கு மகன் தப்பாமல் நடிக்கிறார் என்று பலரும் பாராட்டினர்.

 

இதன்பிறகு அருண்குமார் இயக்கத்தில் சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால், சூர்யாவின் நடிப்பு பெரிய அளவு வெளிபடவில்லை. இப்படியான சூழலில் தான் விஜய் சேதுபதியின் மகன் தற்போது கதாநாயகனாக இருக்கிறார்.

 

சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் திரைப்படத்தின் ஹீரோவாக விஜய் சேதுபதியின் மகன் நடித்திருக்க, படத்திற்கு பீனிக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து பல்வேறு விஷயங்களை சூர்யா பகிர்ந்திருக்கிறார்.

 

அப்போது நெப்போடிசம் பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது, இங்கு மருத்துவரின் மகன் மருத்துவராக இருக்கிறார். போலீஸின் மகன் போலீசாக இருக்கிறார். அப்போது சினிமாவில் இருப்பவரின் மகன் சினிமாவிற்கு வரக்கூடாதா. எங்களுக்கு வாய்ப்புகள் எளிமையாக கிடைத்துவிடும் தான் ஆனால் அதில் வென்று காட்டுவது என்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் நெப்போடீஸம் என்ற வார்த்தையில் இருந்து வெளி வருவதற்கே இங்கு மிகக் கடினத்தை தாண்டி வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்