- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் அதிகரித்து வரும் ரீல்ஸ் பிரபலங்கள், ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரபல சீனியர் நடிகை, இவர்...

சினிமாவில் அதிகரித்து வரும் ரீல்ஸ் பிரபலங்கள், ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரபல சீனியர் நடிகை, இவர் நடிகர் திலகத்தையே மிரட்டியவராச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை வடிவுக்கரசி. ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் முகம் காட்டிய அவர் கன்னிப்பருவத்திலே படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நாயகியாக பல படங்களில் வில்லியாக நடித்த வடிவுக்கரசி கடந்த பல ஆண்டுகளாக டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

பல படங்களில் நாயகன் அல்லது நாயகியின் அம்மா கேரக்டரில் வடிவுக்கரசி நடித்திருக்கிறார். மாமியார் கேரக்டரில் பல படங்களில் வடிவுக்கரசி நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் அவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் உருவான முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மனைவியாக பொன்னாத்தா என்ற கேரக்டரில் வடிவுக்கரசி நடித்திருந்தார். இந்த படத்தில் பல காட்சிகளில் சிவாஜி கணேசனை மதிக்காமல் அவதூறாக பேசுவது போன்ற ஒரு கேரக்டரில் நடித்து வடிவுக்கரசி அசத்தியிருந்தார். இன்றளவும் முதல் மரியாதை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிக்கப்படுகிறது.

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் மூலம் பிரபலமாகும் பலர் சினிமாவில் சீரியல்களில் நடித்து வருவது குறித்து சீனியர் நடிகை வடிவுக்கரசி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் வடிவுக்கரசி கூறியிருப்பதாவது, இன்றைக்கு நிறைய பேர் ரீல்ஸ் பண்றாங்க. அவங்களை நிறைய பேர் பாலோ பண்றாங்க. அப்படி நிறைய பாலோயர்ஸ் இருக்கற ரீல்ஸ் பிரபலங்களை சில இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பு தந்து தங்களது படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

- Advertisement -

பெரிய பெரிய நடிகர்கள் நடித்த காட்சிகளை டயலாக் பேசி பாடல்களை பாடி ரீல்ஸ் போட்ட அவர்கள், நிஜத்தில் டயலாக் கொடுத்து பேச சொன்னால் திணறுகின்றனர். ரீல்ஸ் போட்ட அவர்களுக்கு ரியலாக டயலாக் பேசி நடிக்க தெரியவில்லை. நான் நடிக்கும் பல படங்களில் இது நடந்துக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர்களிடமே நான் நேரடியாக கேட்டிருக்கிறேன்.

அதற்கு அவர்களுக்கு ஆயிரக்கணக்கான பாலோயர்ஸ் இருக்காங்க, அதுதான் நடிக்க வைக்கிறோம் என்று இயக்குனர்கள் சொல்கின்றனர். ஆனால் இந்த ரீல்ஸ் நடிகர்கள் திணறுவதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களுடைய நேரமும் பணமும் வீணாகி வருகிறது. ரீல்ஸ் பொழுதுபோக்குவதற்காக செய்வது. ஆயிரம் பாலோயர்ஸ் அதுவரைக்கும் தான் இருப்பார்கள் என்று நடிகை வடிவுக்கரசி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்