- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி நான் நடிக்க மறுத்தால், நான் ஒரு நடிகையே அல்ல - சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன்...

இப்படி நான் நடிக்க மறுத்தால், நான் ஒரு நடிகையே அல்ல – சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் என்ன இப்படி ஆவேசமா பேசியிருக்காங்க?

- Advertisement -

துவக்கத்தில், விமான பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர் வாணி போஜன். அதன்பிறகு விளம்பர படங்களில் நடித்து பிறகு டிவி சீரியலில் அறிமுகமானார். தெய்வமகள் என்ற சீரியலில் தாசில்தார் சத்யா கேரக்டரில் நடித்து, டிவி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற வாணி போஜன், தொடர்ந்து சில சீரியல்களில் நடித்தார். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டப் பெயரும் உண்டு.

சமீபகாலமாக வெப் தொடர்களிலும், சினிமாவிலும் நடித்து வரும் வாணிபோஜன், தனக்கு பிடித்தமான நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அதே வேளையில், ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட் ஆன போது, டிவி சீரியல் நடிகையை எல்லாம் எதற்கு ஹீரோயினா, எனக்கு ஜோடியா நடிக்க வைக்கறீங்க என, ஒரு நடிகர் வாணிபோஜன் காதுபடவே கோபமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு ஒரு கட்டத்தில், வாணி போஜன் அதே நடிகருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது, அந்த ஹீரோவுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார் வாணி போஜன். சீரியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் நடிப்பு ஒன்றுதான். இதில் உயர்வு தாழ்வு பார்த்த அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டேன் என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார் நடிகை வாணி போஜன்.

எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில், நடிகர் விதார்த் ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ள படம் அஞ்சாமை. இந்த படம் வருகிற 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நடிகை வாணி போஜன், அஞ்சாமை எனக்கு மிக முக்கியமான படம். இந்த படத்தை மிகவும் நேசித்து நடித்திருக்கிறேன்.

- Advertisement -

எந்த படத்தில் இனி நடிக்கப் போனாலும், அப்போது இந்த படத்தின் ஞாபகம் கண்டிப்பாக வந்துவிடும். ஏனென்றால், அந்த அளவுக்கு உயிரை கொடுத்து வேலை செய்திருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறீர்களே என சிலர் கேட்டார்கள். அப்படி ஒரு கேரக்டரில் நான் நடிக்கவில்லை என்றால், நான் நடிகையாக இருப்பதற்கே அர்த்தமில்லை என்றுதான் நினைக்கிறேன்,

ஒரு நடிகையாக, சமூக பொறுப்புள்ள மனிதராக உள்ள யாரும் இந்த படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள். 100 சதவீதம் இந்த படத்துக்காக என் உழைப்பை கொடுத்திருக்கிறேன். இந்த படத்துக்காக டைரக்டர் சுப்புராமன் உள்பட அனைவருமே நிறைய கஷ்டப்பட்டார்கள். அவர்களது வலியை நான் உணர்ந்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார் நடிகை வாணிபோஜன்.

- Advertisement -

சற்று முன்