- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் பிரபுதேவா இருவருக்கும் இணையான ஒரு நடிகர் - பிரசாந்த் குறித்து பேசிய இயக்குனர் ஆர்கே...

விஜயகாந்த் பிரபுதேவா இருவருக்கும் இணையான ஒரு நடிகர் – பிரசாந்த் குறித்து பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி!

- Advertisement -

நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2வது படத்தில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில் நாயகியாக ரோஜா அறிமுகமானார். அதுவும் பெரிய வெற்றியை பெற்றது.

சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் நடிகர் பிரசாந்த் கலந்துக்கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, பிரசாந்த் அப்போது போலவே இப்போதும் இளமையாக இருக்கிறார். 1991ல் நான் பார்த்தது போலவே இன்றும் ஹீரோவாக இருக்கிறார். நானும் பிரசாந்தும் இணைந்து நிச்சயம் ஒரு படம் பண்ணுவோம்.

- Advertisement -

நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். விஜயகாந்துக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் நடிக்க கூடிய திறமையான நடிகர் பிரசாந்த் தான். டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக ஆடக்கூடிய ஒருவர் பிரசாந்த் தான். அதே போல் என்னுடைய படத்தில் தான் நான் அவருக்கு காதல் இளவரசன் என்கிற டைட்டிலை கொடுத்தேன்.

சினிமாவில் பிரசாந்த் ஒரு அஷ்டவதானி. அப்போது சிஜி எல்லாம் வரவே இல்லை. ஆனால் கம்யூட்டர் வெச்சு எப்பவும் நோண்டிகிட்டே இருப்பார். அப்பவே என்னிடம், சார் உங்களுக்கு தெரியாது சார். சினிமா எல்லாம் வேற மாதிரி மாறப் போகுது சார் என்று அப்பவே என்கிட்ட சொல்வார்.

- Advertisement -

பிரசாந்துக்கு டைரக்சன் தெரியும் மியூசிக் தெரியும். எடிட்டிங் தெரியும். இப்படி எல்லாமே தெரியும். அதுதான் பிரச்னையே. பெரும்பாலும் நடிகர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் பிரச்னை இல்லை. வருவாங்க. நடிப்பாங்க. போயிடுவாங்க. எல்லாம் தெரிந்திருந்தால் கரெக்சன் சொல்வாங்க. ஆனா பிரசாந்த் அப்படியல்ல.

பிரசாந்த் பழகுவதற்கு இனிய நண்பர். பண்பாளர். சிறியவர் பெரியவர் என்று பாகுபாடு இல்லாமல் சாதாரண மனிதர்களிடம் கூட சகஜமாக பழகும் குணம் கொண்டவர் என்று அந்த விழாவில் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்