- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத இசைஞானி இளையராஜா; நோட்டீஸ் அனுப்பி நியாயம் கேட்டதால் பரபரப்பு

கடைசியில் சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத இசைஞானி இளையராஜா; நோட்டீஸ் அனுப்பி நியாயம் கேட்டதால் பரபரப்பு

- Advertisement -

இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 45 ஆண்டுகளாக இசை சக்கரவர்த்தியாக கோலோச்சி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி, தெலுங்கு கன்னடம் மலையாளம் என பிற மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, ரசிகர்களால் இசை ஞானி என்று அழைக்கப்படுகிறார். அந்த அளவுக்கு இசையில் பல சாதனைகளை கடந்து பல உச்சங்களை தொட்டவர். சிம்பொனி இசையமைத்து பெருமை சேர்த்தவர்.

ஆனால் இளையராஜா பாடல்களில் எவ்வளவு பெரிய ஞானியோ, அந்த அளவுக்கு மனிதர்களிடம் மோசமாக நடந்து கொள்வதில் அஞ்ஞானி என்ற விமர்சனத்திற்கு ஆளாகி வருபவர். இளையராஜா இசையை நாள் கணக்கில், வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கேட்க கேட்க இனிமையாக மட்டும்தான் இருக்கும் என்றாலும், இளையராஜா பேசுவதை ஒரு மணி நேரம் கூட கேட்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர் பேசினாலே, ஏதேனும் சர்ச்சை, பிரச்சனையை கிளப்பி விடுவது வழக்கம்.

உதாரணமாக இளையராஜா பேசுகையில் அவரிடமிருந்து ஈகோ, தலைக்கணம், கர்வமும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் அவரிடம் அவர் பிள்ளைகள் கூட அதிகமாக பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா தனது படத்தின் இசை குறித்து அவரிடம் காட்டிய போது, ச்சீ தூ என்று அவரை அவமரியாதை செய்ததாக அவரே அந்த நேர்காணலில் வருத்தப்பட்டு கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு இளையராஜா தன் குடும்பத்தாரிடம் கூட அப்பாவாக, குடும்பத் தலைவனாக நடந்து கொள்ளாமல், ஒரு இசைஞானியாகவே அங்கும் செயல்படுவார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. சமீபகாலமாக நான் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் எனக்கு தான் சொந்தம் என்று அவர் உரிமை கொண்டாடி வருவது ஒரு புறம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, பாடல் வரிகளும் இசையும் கலந்ததுதான் பாட்டு. இதை அறியாதவன் அஞ்ஞானி என்று மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். அதற்கு கங்கை அமரனும் பதில் வீடியோ அனுப்பி வைரமுத்துவை கண்டபடி திட்டியிருந்தார். இப்போது, நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் கூலி படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூலி பட டீசரில் இடம்பெற்ற வா வா பக்கம் வா என்ற எனது இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும், அல்லது டீசரிலிருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நிபந்தனை விதித்துள்ளார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பில் சுட்டி காட்டி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரியவந்துள்ளது. ரஜினி நடித்த படத்துக்கே இப்படி இளையராஜா விவகாரம் செய்திருப்பது தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்