- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது என்னோட இஷ்டம்… விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? - இயக்குனர் பாலா பட...

அது என்னோட இஷ்டம்… விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? – இயக்குனர் பாலா பட நாயகி ஆவேசம்!

- Advertisement -

பொதுவாக ஒருவரது தோற்றத்தில் அவர்கள் அணியும் ஆடை என்பது மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்று கூட ஒரு பழமொழி சொல்வதுண்டு. காரணம் பகட்டான ஆடைகளையும் நேர்த்தியான ஆடைகளையும் அணிந்திருக்கும் ஒருவருக்கு சட்டென ஒரு மரியாதை அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில் அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் ஒருவர் காணப்பட்டால் அவர் அலட்சியப்படுத்தப்படுகிறார்.

ஆனால் சினிமாவை பொருத்தவரை நடிகைகள் அணியும் ஆடை என்பது பெரும்பாலும் அவர்களது அழகை வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே பெரும்பாலும் இருக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் மட்டுமின்றி பொதுநிகழ்ச்சிகளுக்கு வரும்போது கூட சில நடிகைகள் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக சினிமா விருது விழாக்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வரும்போது உடலின் முக்கிய பாகங்கள் தெரியும் விதமாக அரைகுறை ஆடைகளை அணிந்து வந்து ரசிகர்களை பார்வையாளர்களை மூச்சு முட்ட வைக்கின்றனர். இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான ஆடைகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வேதிகா. இவர் முனி காளை பரதேசி காஞ்சனா 3 காவியத்தலைவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நடிகை வேதிகா சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில், அணியும் ஆடைகளை வைத்து நடிகைகளின் மீது தவறான விமர்சனங்கள் செய்யப்படுவது குறித்து வேதிகா தன்னுடைய கருத்தை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் அதில் கூறியிருப்பதாவது, நடிகைகள் என்றாலே எதையாவது கூறி தாக்குவதில் சிலர் நிபுணர்களாக உள்ளனர். கவர்ச்சி உடை அணிந்தாலே விமர்சிக்க தொடங்குகிறார்கள்.

இது மிகவும் தவறானது. எங்களது உடை தேர்வுகள் பற்றி நீங்கள் தீர்மானிக்க முடியாது. நான் ஒரு நடிகையாகவும் ஒரு பெண்ணாகவும் என்னை நானே நன்றாக அறிவேன். பிகினி அணிவது என் விருப்பம். அதில் யாருக்கும் பேச உரிமை இல்லை. விமர்சனம் செய்யும் புத்தியுள்ளவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் வேதிகா கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்