நடிகை விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக பிரண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தார். பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் ராமச்சந்திரா எஸ் மேடம் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். பெங்களூரில் நடிகை விஜயலட்சுமி தனது அக்காவுடன் சில ஆண்டுகளாக இருந்து வருகிறார். அடிக்கடி நாம் தமிழர் கட்சி சீமான் குறித்து விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வைரலானவர் விஜயலட்சுமி.
தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, எல்லோரும் எப்படி இருக்கீங்க? இனிமேல் வீடியோவில் பேசமாட்டேன் என்றும் கொஞ்ச நாள் அனைவரிடமிருந்தும் நான் தூரமாக இருப்பேன் என்றும் சொல்லி இருந்தேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நானும் என்னுடைய அக்காவும் பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு ஷிப்ட் ஆக போகிறோம். இதற்கு காரணம் பெங்களூரில் எங்களுக்கு என்று யாரும் இல்லை. எனக்கு சினிமாவில் நடிப்பது எப்போதுமே பிடிக்கவே பிடிக்காது. அதனால் சினிமாவை எப்போதோ முடித்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விலகி விட்டேன்.
என்னுடைய அக்காவை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள் என்று தொடர்ந்து பலர் வற்புறுத்தி கொண்டே இருக்கிறார்கள். எங்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய அக்கா மட்டும் ஏன் அனாதை ஆசிரமத்திற்கு சென்று கஷ்டப்பட வேண்டும்? நானும் அவருடன் இருந்து நாங்கள் இருவரும் அனாதை ஆசிரமத்தில் இருந்து கொள்ளலாமே என்று இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.
எனக்கு பின்னால் அந்த கட்சி இருக்கிறது, இந்த கட்சி இருக்கிறது. அவருக்கு கோடிக்கணக்கில் செட்டில்மெண்ட் செய்து விட்டார்கள். வீடு கொடுத்தாங்க பங்களா கார் கொடுத்தாங்க என்று பல கதைகளை சொன்னார்கள். விஜயலட்சுமி அதற்காக தான் வந்தார். அதற்காக தான் மிரட்டினார் என்று பல்வேறு விதமான கதைகளை சொன்னாங்க.
ஆனால் இப்போது உண்மை என்ன என்பதை இந்த வீடியோவை பார்த்த பிறகு மக்களே தெரிந்து கொள்வார்கள். விஜயலட்சுமி இவ்வளவு காலமாக போராடினாள். இப்போது பெங்களூரில் உள்ள ஏதோ ஒரு ஆசிரமத்தில் அனாதையாக இருக்கிறாள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் ஆவேசமாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





